பாட்மின்டன்: இந்தியாவின் அபர்னா பொபட் தோல்வி
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் பாட்மின்டன் போட்டியில் பெண்கள் பிரிவில் இந்தியாவின்அபர்னா பொபட் முதல் சுற்றில் தோல்வியுற்று வெளியேறினார். இதன் மூலம்பெண்கள் பிரிவு பாட்மின்டனில் இந்தியாவின் பதக்கக் கனவு தகர்ந்தது.
சனிக்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில் வேல்ஸ் நாட்டின் கெல்லி மோர்கனை எதிர்த்துஅபர்னா பொபட் விளையாடினார்.
நேரடி நுழைவு மூலம் சிட்னி ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட அபர்னா முதல் செட்டை11-5 என்ற கணக்கில் எளிதாக வென்றார். இரண்டாவது செட்டிலும் 7-4 என்றகணக்கில் முன்னிலையில் இருந்தார்.
ஆனால், அதன்பிறகு கெல்லி மோர்கன் சிறப்பாக விளையாடி அந்த செட்டை 11-7என்ற கணக்கிலும், 3-வது செட்டை 11-2 கணக்கிலும் வென்றார்.
இந்தியாவின் முதல் நிலை வீராங்கனையும் முன்னாள் உலக ஜூனியர் சாம்பியனுமானஅபர்னா பொபட் முதல் சுற்றிலேயே தோற்றது இந்திய அணியினருக்கு சற்றுஏமாற்றத்தை அளித்தது.
சிட்னி ஒலிம்பிக்கில் தோற்று வெளியேறிய இரண்டாவது நபர் அபர்னா பொபட்.ஏற்கெனவே துப்பாக்கிச் சுடுதலில் அஞ்சலி வேத்பதக் தோற்று வெளியேறிவிட்டார்என்பது குறிப்பிடத்தக்கது.
அபர்னா பொபட் தோற்று வெளியேறிவிட்டாலும் ஆண்கள் பிரிவில் கோபிசந்த்விளையாடுகிறார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications