குடித்தார் பெப்சி - வென்றார் ரூ. 5லட்சம்

Subscribe to Oneindia Tamil

வல்சாட் (குஜராத்):

தனக்கு ரூ. 5 லட்சம் பரிசு கிடைக்கும் என்று நிச்சயம் எதிர் பார்த்திருக்கமாட்டார் பாபுபாய் புஜாரி. வீட்டில் ஓய்வுஇருந்த அவர் பத்திரிக்கை படித்துக் கொண்டிருந்தபோது அதில் தனது பெயர் வந்திருப்பதையும் தனக்கு ரூ. 5லட்சம் பரிசு விழுந்திருப்பதையும் பார்த்து ஒரு நிமிடம் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துபோனார்.

பெப்சி குளிர்பான நிறுவனம் தனது குளிர்பான விற்பனையை அதிகரிக்க ஒரு போட்டியை அறிவித்துள்ளது.பெப்சி குளிர்பான பாட்டிலின் மூடிக்கு அடியில் ஒரு குறிப்பிட்ட எண் குறிக்கப்பட்டிருக்கும். வார ஒரு முறையோஅல்லது மாதம் ஒரு முறையோ குலுக்கல் நடைபெறும்.

அந்த குலுக்கலில் ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு முதல் பரிசாக ரூ. 5 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 10 ஆயிரமும்வழங்கப்படுகிறது.

எதேச்சையாக வெளியே சென்றிருந்தபோது பெப்சி குளிர்பானம் குடித்த பாபுபாய் புஜாரி எதற்கும் இருக்கட்டுமேஎன்று எண்கள் பொறிக்கப்பட்டிருந்த அந்த பாட்டிலின் மூடியை வீட்டுக்கு எடுத்து வந்தார். அந்த மூடியில் இருந்தஎண்ணுக்குத் தான் அவருக்கு முதல் பரிசாக ரூ. 5 லட்சம் கிடைத்துள்ளது.

குஜராத்தில் வல்சாட் நகரில் சாலையோர பெட்டிக் கடை வைத்துள்ளார் பாபுபாய்புஜாரி. இப்போது எனக்கு இந்தபரிசு கிடைத்திருப்பது நான் போன ஜென்மத்தில் செய்த நல்ல காரியங்களுக்கு கடவுள் எனக்கு நல்ல வெகுமதிகொடுத்துவிட்டதாகவே கருதுகிறேன் என்றார் பாபுபாய் புஜாரி.

ஒரு காலத்தில் லோனுக்காக வங்கிக்கு அலைந்து கொண்டிருந்த பாபுபாய் புஜாரியை இப்போது வங்கி அதிகாரிகள்சந்தித்து பரிசுத் தொகையை எங்கள் வங்கியில் டெபாசிட் செய்யுங்கள் என்று நச்சரித்து வருகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

பரிசுத் தொகையை வைத்து எனது மகளுக்கு நல்ல கல்வியை அளிக்கவேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.எனது தொழிலையும் நான் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளேன். பரிசு கிடைத்தற்காக எனது நண்பர்களுக்கு விருந்துகொடுப்பேன் என்றார் பாபுபாய் புஜாரி.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+