சைக்கிள் போட்டியில் பிரான்ஸ் வீராங்கனைக்குத் தங்கம்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
பெண்களுக்கான 500 மீட்டர் நேரப் போட்டியில் (டைம் டிரையல்) பிரான்ஸின்ஃபெலிசியா பாலாஞ்சர் தங்கப் பதக்கம் வென்றார்.
சனிக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் மிச்செல் பெர்ரிஸ்வெள்ளிப் பதக்கமும், சீனாவின் ஜியாங் சியுஹுவா வெண்கலப் பதக்கமும்வென்றனர்.
பந்தைய தூரத்தை பாலாஞ்சர் 34.140 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.ஒலிம்பிக்கில் முதன்முறையாக இப் போட்டி இப்போதுதான் விளையாடப்படுகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் வேறு சர்வதேச விளையாட்டுக்களில் இப் போட்டி விளையாடப்படுகிறது.இப் போட்டியில் தொடர்ந்து 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை பாலாஞ்சர்வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications