திமுக சார்பில் தேர்தலில் போட்டியிடத் தயார் என்கிறார் வீரப்பனின் மனைவி
சென்னை:
திமுகவோ அல்லது பாமகவோ "சீட் கொடுத்தால் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று கடத்தல் மன்னன் வீரப்பனின்மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கலந்து கொண்டார். அப்போதுஅவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி:
எனது கணவர் வீரப்பனைப் பிரிந்து 6 ஆண்டாகிறது. பெண்கள் விஷயத்தில் அவர் நியாயமான முறையில் நடந்து கொள்வார்.அவருக்கு அரசு பொதுமன்னிப்பு வழங்கியாக வேண்டும்.
நான் தற்போது மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன்.
மனிதாபிமான அடிப்படையில் அரசியல்வாதிகள் உதவி புரிந்து வருகின்றனர். பாமக தலைவர் ராமதாசிடம் உதவி கேட்டு மனுகொடுத்தேன். அவரும் பண உதவி செய்து வருகிறார்.
இதனால் வீரப்பனுக்கும், ராமதாசுக்கும் தொடர்பு உண்டு என வாழப்பாடி ராமமூர்த்தி பொய்யான குற்றம் சாட்டியுள்ளார்.அனைத்து சாதிகளையும் ராமதாஸ் ஆதரிக்கிறார்.
பா.ம.க. சார்பில் சீட் கொடுத்தால் மேட்டூர், பென்னகரன் அல்லது போடி தொகுதிகளில் போட்டியிடத் தயார். திமுக சார்பில்போட்டியிடவும் நான் தயார். ஏனெனில் முதல்வர் கருணாநிதி நல்லாட்சி நடத்தி வருகிறார்.
தீவிரவாதிகள் பிடியில் வீரப்பன் உள்ளதாக கூறுவது தவறு. வீரப்பன் பிடியில் தான் தீவிரவாதிகள் உள்ளனர். அரசு தூதராகஅனுப்பப்படும் கோபால் கூறுவது அனைத்தும் உண்மை என்று கூற முடியாது.
121 தடா கைதிகளில் 12 பேர் இளம் பெண்களாக உள்ளனர். இவர்களுக்கு எந்த ஆதரவும் இல்லை. இவர்களில் வீரப்பன்முகத்தை பார்க்காதவர்கள் கூட உள்ளனர். இவர்களையும் வீரப்பன் கூட்டாளிகள் என்று கைது செய்து சிறையில் போட்டுள்ளனர்.
கர்நாடக போலீசின் அடாவடி செயலால் தமிழர்கள் பலர் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர். கர்நாடக அரசை தட்டிக் கேட்கவேண்டும் என்பதற்காகவே ராஜ்குமார் கடத்தப்பட்டுள்ளார். ராஜ்குமார் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது. கோரிக்கைகளைஏற்காதவரை ராஜ்குமாரை வீரப்பன் விடமாட்டார். காட்டுக்குள்ளேயே ராஜ்குமார் இருக்க வேண்டியது தான்.
தமிழர்களுக்கு மீண்டும் பிரச்னை ஏற்பட்டால் நேரடியாக களத்தில் இறங்கி அதிகாரிகளை சுடக் கூட வீரப்பன் தயங்கமாட்டார்என்றார் முத்துலட்சுமி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications