கும்பகோணத்தில் ஒரு கல்யாண மன்னன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காதல் மன்னன் மாதிரி இவர் ஒரு கல்யாண மன்னன். இன்னும் திருமணமாகவில்லை என்று கூறியே 3 பெண்களை மணம் முடித்தார். நான்காவதாகஒருவருக்கு வலை விரிக்கும் முன் போலீஸ் வலையில் வகையாய் சிக்கிக் கொண்டார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருநாகேசுவரம் சீனிவாசநல்லூரைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன் (31).

இவர் சீனிவாசநல்லூரில் "மதர் இந்தியா கிராம வளர்ச்சி நிறுவனம் என்ற பெயரில் ஒரு கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில்பெண்களுக்கு தையல் பயிற்சி அளித்து வந்தார். ஏராளமான இளம் பெண்கள் தையல் பயிற்சியில் சேர்ந்தனர்.

அதில் செல்வகுமாரி என்ற பெண்ணுக்கு ஸ்ரீதரன் காதல் வலை விரித்தார். சில நாட்களில் வெற்றி கிடைத்தது. காதலர்களாக வலம் வந்த இருவரும் பதிவுதிருமணம் செய்து கொண்டனர். ஒரு ஆண் ஒரு பெண் குழந்தைகள் பிறந்தன.

சில ஆண்டுகளுக்கு பிறகு அதே தையல் பயிற்சிக்கு வந்த மகேஸ்வரி என்ற இளம் பெண்ணுக்கு வலை விரித்தார். அப்பெண்ணிடம் தனக்கு இன்னும்திருமணமாகவில்லை என்று பொய் சொன்னார். அப்பாவி பெண்ணும் அவரை நம்பி காதலித்தார். காதல் எல்லை மீறி படுக்கை வரை போய் விட்டதால்அவரை ரகிசிய மனைவியாக்கிக் கொண்டார்.

முதல் மனைவி போல் ஒரு ஆண், ஒரு பெண் என்ற அளவில் இரண்டு குழந்தைகள் இவர்களுக்கு பிறந்தன.

இதோடு நிற்கவில்லை ஸ்ரீதரன். இவரிடம் தையல் பயிற்சி முடித்த பெண் ஒருவர் அரசு உதவி கேட்டு விண்ணப்பித்திருந்தார். அப்பெண் பெயர் சாந்தி. அதற்காகதஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தவரை ஸ்ரீதரன் சந்தித்தார்.

எப்படியும் அரசு உதவி பெற்றுத் தருகிறேன் என்று ஏமாற்றி அப்பெண்ணிடம் காதலை வளர்த்தார். அடிக்கடி ரகசியமாக சந்தித்துப் பேசினார். வீட்டாருக்குவிஷயம் தெரிந்தபோதும் இன்னும் திருமணமாகவில்லை, சாந்தியை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று வழக்கமான பொய்யை சொன்னார்.

அதை நம்பி சாந்தி வீட்டாரும் திருமண ஏற்பாடுகள் செய்தனர். ஸ்ரீதரன் - சாந்தி திருமணம் நடந்தது. அதன் பின்னரும் சாந்தியின் அரசு உதவி தேடல்நிற்கவில்லை. கணவர் முகவரியுடன் மீண்டும் விண்ணப்பித்ததார். அப்போது அதிகாரிகள் நடத்திய விசாரணையில் விஷயம் வெட்டவெளிச்சாமானது.

மூன்று மனைவிகளும் போர்க்கொடி தூக்கியபடி போலீசுக்கு போனார்கள். போலீஸ் ஸ்ரீதரனுக்கு கைவிலங்கு பூட்டியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+