இரட்டைக் குடியுரிமை வழங்க இந்தியா திட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

வெளிநாடுகளில் பிறந்த இந்திய வம்சாவளியினருக்கு இரட்டை நாட்டுரிமை (dualnationality) வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்திய வம்சாவளியினருக்கான கமிட்டித் தலைவர் சிங்கி இது குறித்துக் கூறுகையில்,

இரட்டை நாட்டுரிமை தான் வழங்கப்படும். இரட்டைக் குடியுரிமை (dual citizenship)வழங்கப்படமாட்டாது.

குடியுரிமையும், நாட்டுரிமையும் நன்கு ஆராயப்பட்டு இந்திய அரசமைப்புப்படி முடிவுசெய்யப்படும். இரண்டு துணைக் குழுக்கள் இதற்காக தனியாக அமைக்கப்படும்.

அயல் நாட்டில் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்தியாவைப் பிறப்பிடமாகக்கொண்டவர்களின் நலன்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்படும். இதற்கான செயற்குழு ஒன்றைபிரதமர் நியமிப்பார்.

இரட்டைக் குடியுரிமைக்கான துணைக்குழு பெயரளவில் அமைக்கப்படவில்லை. இந்தக்குழு சட்டத்திருத்தங்கள் குறித்தும் ஆலோசனை வழங்கும். நாடாளுமன்றத்தில் அதுவிவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

முன்பு இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்டவர்களுக்கு இரட்டை குடியுரிமைக்கு பதிலாகஇரட்டை நாட்டுரிமை வழங்கப்படுவது என்ற கருத்து அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.ஆனால் அது சட்டமன்றத்தில் ஏற்கப்படவில்லை.

இரட்டைக் குடியுரிமை என்பது ஒருவர் அயல் நாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கும் போதேஇந்திய பாஸ்போர்டை வைத்துக் கொள்ளவும் வழி செய்யும்.

இது சில பாதுகாப்புப் பிரச்சனைகளை உண்டாக்கும். வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள்பலரும் இரட்டை நாட்டுரிமையையே விரும்புகிறார்கள். அது ஒவ்வொரு முறையும் விசாபெறும் தொல்லையை தடுக்கும்.

இரட்டை குடியுரிமை பற்றிய முடிவு அதை ஆராயும் குழு அதில் உள்ள அனைத்துபிரச்சனைகள் குறித்தும் ஆராய்ந்து முடிவு செய்யும்.

இந்தியாவில் உள்ள சட்டமுறைப்படி குடியுரிமை அல்லது நாட்டுரிமை ஏதாவது ஒன்றைமட்டுமே பெற முடியும். செயற்குழு தனது முடிவை 6 மாத காலத்திற்குள் சமர்ப்பிக்கும்என்றார் சிங்வி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+