ராஜ்குமார் எப்போது மீட்கப்படுவார் என்பதை கணிக்க முடியாது - தமிழக டிஜிபி
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை கடத்தி வைத்துள்ள சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கராணுவத்தை அனுப்புவதற்கான சூழ்நிலை இப்போது இல்லை. மேலும் ராஜ்குமார் எப்போதுமீட்கப்படுவார் என்பதையும் கணிக்க முடியாது என்று தமிழக டிஜிபி எப்.சி. சர்மா தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
வீரப்பன் பிடியிலிருந்து நடிகர் ராஜ்குமாரையும் மற்ற 3 பேரையும் மீட்கும் முயற்சியில் காலதாமதம்ஏற்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், வேண்டுமென்றே காலதாதம் செய்யப்படவில்லை. சட்டச்சிக்கல்கள் உள்ளதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
காலதாமதம் ஆவதற்கு எந்தப் பின்னணியும் இல்லை. ராஜ்குமாரை மீட்க தமிழக அரசும், கர்நாடகஅரசும் தெளிவான முடிவை எடுத்து நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இது பற்றி மேற்கொண்டு கருத்துதெரிவிக்க விரும்பவில்லை.
ராஜ்குமார் எப்போது மீட்கப்படுவார் என்பதையும் இப்போதைக்குக் கணிக்க முடியாது. ராஜ்குமார்கடத்தல் சம்பவத்தில் போலீஸ் நடவடிக்கை கூடாது என்பதுதான் வீரப்பனின் நிபந்தனை. அதனால்தான்வீரப்பனுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வீரப்பன் பிரச்சினையை நாங்கள் மிகவும் கவனமாக அணுகி வருகிறோம். தேவையில்லாத கருத்தைத்தெரிவிப்பதும், உடனடி நடவடிக்கை எடுப்பதும் மிகவும் ஆபத்தாக முடிந்துவிடும்.
தமிழ்த் தீவிரவாதிகளுக்கும் வீரப்பனுக்கும் தொடர்பு இருப்பது ஏற்கெனவே வெளியுலகுக்குதெரிந்துவிட்டது. ஆனால், வீரப்பனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லைஎன்பதை திட்டவட்டமாகச் சொல்லமுடியும்.
வீரப்பனைப் பிடித்து ராஜ்குமாரை மீட்க ராணுவம் அனுப்பப்படுமா என்பதை இப்போதைக்குச்சொல்லமுடியாது. இப்போதுள்ள சூழ்நிலையில் காட்டுக்குள் ராணுவத்தை அனுப்புவதற்கான வாய்ப்புஇல்லை. தேவைப்படும்போது அதுபற்றி பின்னர் யோசிக்கப்படும்.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தமிழ்த் தீவிரவாதிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அதைவைத்து அவர்கள்தமிழகம் முழுவதும் பரவி விட்டார்கள் என்றோ பலம் பெற்றுவிட்டார்களோ என்றோ கூறமுடியாதுஎன்றார் சர்மா.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications