திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீப விழா செப். 20-ல் தொடக்கம்
திருவண்ணமலை:
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப விழா இம் மாதம் 20-ம்தேதி தொடங்குகிறது.
ஆண்டுதோறும் அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப விழா வெகு சிறப்பாகக்கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கார்த்திகை தீப விழா கொண்டாடப்படஉள்ளது.
அதற்கான முன்னேற்பாடு நிகழ்ச்சிகள் அருணாசலேஸ்வரர் கோயிலில் தொடங்கப்பட உள்ளன. முதல்நிகழ்ச்சியாக வரும் புதன்கிழமை (செப்டம்பர் 20) அதிகாலை 3 மணிக்கு கோயிலின் நடைதிறக்கப்படும்.
பின்னர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மன் மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள மற்றசுவாமிகளுக்கும் சிறப்பு ஆராதனை, அபிஷேகங்கள் நடத்தப்படும்.
அதற்குப் பிறகு கோயில் வளாகத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதிக்கு முன்பு பந்தக்கால் கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்படும்.
காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் மேள, தாளத்துடன் கோயிலுக்குள் இருந்து பந்தக்கால் வெளியேகொண்டு வரப்பட்டு பெரிய தேருக்குக் கொண்டு செல்லப்படும். பிறகு மற்ற தேர்களுக்கும் பூஜைசெய்யப்படும்.
இறுதியாக ராஜ கோபுரம் முன்பு பந்தக்கால் நடப்படும். இந் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானபக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து கார்த்திகைதீப விழா பணிகள் முழு வீச்சில் நடைபெறும்.
அருணாசலேஸ்வரர் கோயிலில் இருந்த கொடிமரம் சில மாதங்களுக்கு முன்பு வீசிய சூறாவளிக் காற்றில்சாய்ந்துவிட்டது. அந்த மரம் அகற்றப்பட்டு வேறு ஒரு கொடி மரம் வைக்கப்பட்டுள்ளது.
புதிய கொடி மரத்துக்காக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து 72 அடி உயர கொடிக் கம்பம் கொண்டுவரப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத்துக்கு முன்பு இப் புதிய கொடி மரத்தை நிறுவ கோயில் நிர்வாகிகள்திட்டமிட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications