பெண்கள் டிரையத்லான்: தங்கம் வென்றது சுவிஸ், ஆஸி.யின் உலக சாம்பியனுக்கு வெள்ளி
சிட்னி:
ஒலிம்பிக் போட்டிகளில் முதன் முறையாக சிட்னி ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்ட பெண்கள்டிரையத்லான் போட்டியில் சுவிடர்லாந்து வீராங்கனை பிரிக்கிட்டி மகமாஹான் தங்கப்பதக்கம் வென்றார்.
40 கிலோமீட்டர் தூரத்தை 2 மணி 40 விநாடிகளில் கடந்து அவர் தங்கம் வென்றார்.
இப்போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் சுவிட்சர்லாந்து வீராங்கனை மாகலி மெஸ்மெர்வென்றார். வெள்ளிப் பதக்கத்தை ஆஸ்திரேலியாவின் மிச்செல்லி ஜோன்ஸ் வென்றார்.
பெண்கள் டிரையத்லானின் உலக சாம்பியனான மிச்செல்லி ஜோன்ஸ், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நீச்சல் மற்றும் சைக்கிள் பிரிவுகளில் முன்னணியில் இருந்த அவர் கடைசி பிரிவான ஓட்டப்பந்தயப் பிரிவில் பின் தங்கினார். சுவிட்சர்லாந்து வீராங்கனைகளுக்கும் அவருக்கும்இடையே கடுமையான போட்டி நிலவியது,
கடையில் சுவிட்சர்லாந்து வீராங்கனைகள் தங்கப் பதக்கத்தையும், வெண்கலப்பதக்கத்தையும் தட்டிச் சென்றனர். மிச்செல்லி ஜோன்ஸ் வெள்ளிப் பதக்கம் பெற்றதுஆஸ்திரேலிய மக்களுக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications