ஊழல்வாதிகளின் ஜாதிக் கட்சிகள்: விஜயகாந்த் சாடல்
தேனி:
ஊழலில் பணம் சேர்த்தவர்கள் பதவிக்காக சாதிக் கட்சிகளை தொடங்குகிறார்கள் என்று நடிகர் விஜயகாந்த் கடுமையாக சாடியுள்ளார்.
விஜயகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் தேனியில் 48 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜயகாந்த், அவரதுமனைவி பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர்.
இந் நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசுகையில், இதயபூர்வமாக இந்த திருமணத்தை நாங்கள நடத்தியுள்ளோம். இன்றைய சூழ்நிலையில் விலைவாசி ஏறியுள்ளது.இதனால் ஒரு திருமணத்தை நடத்துவதே மிகவும் சிரமம்.
திருமணச் செலவுக்கு பயந்தே சிலர் பெண் குழந்தையே வேண்டாம் என்று வெறுக்கின்றனர். ஆனால், பெண் குழந்தைகள் தான் புகுந்த வீட்டிற்கும், பிறந்தவீட்டிற்கும் பெருமை தேடித் தருகின்றனர்.
தமிழ்நாட்டில் எனக்கு 32,000 ரசிகர் மன்றத்தினர் உள்ளனர். இவர்கள் அனைவரும் வரதட்சணை வாங்குவது இல்லை என்று உறுதி எடுத்தால்தமிழ்நாட்டில் மறுமலர்ச்சி உருவாகும். நான் இந்த ஆண்டு மாணவர்களின் கல்விக்காக ரூ.41 லட்சம் செலவழித்துள்ளேன். இதில் சாதி மதத்தைபார்க்கவில்லை.
நீங்கள் விடும் மூச்சுக் காற்று சாதிக்கு சாதி வேறுபடவா செய்கிறது? மூச்சுக் காற்று எல்லாருக்கும் ஒன்று தான். அதேபோல் எல்லோரும்ஒன்றுபட வேண்டும்.
முன்னாள் மந்திரிகளும், எம்.பி.க்களும் அவர்கள் பதவியில் இருந்தபோது அவர்களது சமுதாயத்தை பற்றி சிந்திக்கவில்லை. ஊழல் செய்து பணத்தைசேர்த்தனர். இப்போது பதவி இல்லை என்பதால் மீண்டும் கொள்ளை அடிப்பதற்காக பதவியை பிடிக்க சாதியின் பெயரில் அரசியல் கட்சிகளை தொடங்கிவருகின்றனர்.
சாதியின் பெயரால் அவர்கள் உங்களை தேடி வந்தால், அவர்கள் சம்பாதித்த பணம் கரையட்டும் என்று அவர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சமீபத்தில் தொலைத் தொடர்பு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. 3 லட்சம் ஊழியர்களுக்காக 100 கோடிமக்கள் பாதிக்கப்பட்டனர். அந்த துறையை தனியார்மயமாக்கினால் இந்த பாதிப்பு எல்லாம் போய் விடும் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications