தமிழகத்தில் உடல் ஊனமுற்றவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
சென்னை:
தமிழகத்தில் உள்ள கை, கால் ஊனமுற்றவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி உள்பட பல மாவட்டங்களில் வாழும் உடல் ஊனமுற்றவர்களுக்கு கம்ப்யூட்டர்பயிற்சி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாகவும், பிளஸ் டூ வகுப்பில் தேறியவர்களாகவும் இருக்க வேண்டும்.
பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ 300 வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தங்கள் செலவிலேயே இடவசதி மற்றும் உணவுவசதி செய்து கொள்ள வேண்டும்.
பயிற்சியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்:
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்,
மாவட்ட மறுவாழ்வு மையம்,
100, சேமியர்ஸ் சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை-18
சேலம், கடலூர், விழுப்புரம், தர்மபுரி, மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்:
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்,
மாவட்ட மறுவாழ்வு மையம்,
1813, ராஜாஜி தெரு, சொர்ணபுரி,
சேலம்.
கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, மற்றும் கரூர் மாவட்டங்கள்:
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்,
மாவட்ட மறுவாழ்வு மையம் 9,
7 வது தெரு,
கோயம்புத்தூர்
திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை:
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர் 1, ஏ,
அப்துல் கலாம் தெரு,
காஜா நகர், மன்னார் புரம், திருச்சி
மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மற்றும் விருதுநகர்:
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்,
சுப்ரமணியபுரம், வில்லாபுரம் அஞ்சல்,
வீட்டு வசதி வளாகம்,
மதுரை.
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி:
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்,
244, திருச்செந்தூர் சாலை, பாளையங்கோட்டை,
திருநெல்வேலி.
மேற்கண்ட முகவரிகளில் வரும் 26 ம் தேதிக்குள் விண்ணப்பித்து விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications