ஒலிம்பிக்கில் டிரையத்லான்: முதல் தங்கத்தை வென்றார் கனடா வீரர்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
ஒலிம்பிக் போட்டியில் முதன் முறையாகச் சேர்க்கப்பட்டுள்ள டிரையத்லான்விளையாட்டில் கனடா வீரர் முதல் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
கனடா வீரர் சைமன் ஒயிட்பீல்டு பந்தைய தூரத்தை 1 மணி 48 நிமிடம் 24 விநாடிகள்கடந்து தங்கம் வென்றார். டிரையத்லான் விளையாட்டின் கடைசிப் பிரிவான ஓட்டப்பந்தயத்தில் கடைசி 200 மீட்டர் தூரத்தை விரைவாக ஓடிக் கடந்து அவர் தங்கம்வென்றார்.
அப்போது அவருக்குக் கடும் போட்டியாக இருந்தவர் ஜெர்மனியின் ஸ்டீபன்வுக்கோவிக். இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். செக் குடியரசின் ஜான் ரெஹுலாவெண்கலப் பதக்கம் வென்றார்.
சனிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான டிரையத்லான் போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை சுவிட்சர்லாந்து வீராங்கனை மெக்மாஹன் பிரிகிட்டி வென்றார் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications