அடேயப்பா...செக்ஸுக்கு 1.85 கோடி வெப்தளங்கள்
சென்னை:
செக்ஸுக்கு மட்டும் 1.85 கோடி வெப் தளங்கள் இருப்பதாக செக்ஸ் கல்வி படங்களை இயக்கி நடித்த ஜேக்கப் பிரீஸ் சென்னையில் சனிக்கிழமை தெரிவித்தார்.
சென்னையில் ஜேக்கப்பிரீஸ்.காம் என்ற புதிய செக்ஸ் கல்வி வெப்சைட் தொடக்க விழாவில் கலந்து கொண்ட ஜேக்கப் பிரீஸ் கூறுகையில், செக்ஸ் பற்றிமட்டும் 1.85 லட்சம் வெப் தளங்கள் உள்ளன. தற்போது நான் தொடங்கியுள்ள வெப் சைட் ஆபாசமானதல்ல. செக்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாகவே உள்ளது.
குறிப்பாக பெண்கள் பார்க்கும் விதத்தில் உள்ளது. இந்த டாட்காம் கண்டிப்பாக 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான்.
இதில் புகைப்படங்களுடன், விளக்கங்களும் சொல்லப்பட்டிருக்கும். இந்த வெப்சைட்டில் உறுப்பினர்களாக வேண்டுமெனில் இந்தியாவில் உள்ளவர்கள் 100ரூபாயும், வெளிநாட்டில் உள்ளவர்கள் 250 ரூபாயும் கட்ட வேண்டும் என்றார் ஜேக்கப்பிரீஸ்.
இதில் கலந்து கொண்ட பிரபல டிவி நட்சத்திரம் சொர்ணா பேசியதாவது:
செக்ஸ் என்பது 12 வயதுக்குப்பிறகு ஆண், பெண் இருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். அதை ஆபாச உணர்வோடு பார்க்கக் கூடாது.
செக்ஸ் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளாத கணவன், மனைவியால் மகிழ்ச்சியாக வாழ முடியாது.
ஆணோ, பெண்ணோ கெட்டுப்போவதற்கு ஏற்கனவே நிறைய வெப்சைட்டுகள் உள்ளன. இந்த வெப் சைட்டைப் பார்த்துத்தான் கெட்டுப்போக வேண்டும்என்ற எண்ணம் இல்லை.
ஆனால் ஜேக்கப்பிரீஸ்.காம் வெப் சைட் பற்றி நான் விசாரித்த அளவில் செக்ஸ் ஒரு கல்வியாகவே ஆபாசமில்லாமல் காட்டப்படுகிறது என்பதை அறிந்துகொண்டேன்.
இந்த வெப்சைட்டைப் பார்ப்பதற்கு ரகசியக் குறியீடு தருகிறார்கள். ரகசியக் குறியீடு இல்லாமல் யாரும் இதைப் பார்க்க முடியாது என்றார் சொர்ணா.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications