ஒலிம்பிக்கில் இந்தியா
Subscribe to Oneindia Tamil
இந்த மில்லேனியத்தின் முதல் ஒலிம்பிக் போட்டியான சிட்னி 2000 ஒலிம்பிக் போட்டியில் இதுவரை கலந்து கொண்ட அணிகளிலேயே பெரிய அணியை இந்தியா அனுப்பியுள்ளது. மொத்தம் 117 பேர் இதில் கலந்து கொள்கின்றனர்.
மொத்தம் உள்ள 31 விளையாட்டுப் பிரிவுகளில் 14 பிரிவுகளில் மட்டும் இந்தியா கலந்து கொள்கிறது. குறிப்பாக பதக்கம் கிடைக்கும் என்று நம்பப்படும் டென்னிஸ், ஹாக்கி, குத்துச்சண்டை, பளுதூக்குதல் ஆகிய பிரிவுகள் தவிர அதலெடிக்ஸ், பாட்மிண்டன், கால்பந்து, ஜூடோ, படகுப் போட்டி, பாய்மரப் படகுப் போட்டி, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் ஆகிய பிரிவுகளில் இந்தியா போட்டியிடுகிறது.
செப்டம்பர் 19-ல் இந்தியா கலந்து கொள்ள உள்ள போட்டிப் பிரிவுகள் விவரம்:
- படகுப் போட்டி: ஆண்களுக்கான காக்ஸ்லெஸ் ஜோடி - ரெபிகேஜ்-1 பிரிவில்கசம்கான் மற்றும் இந்தர்பால் சிங் பங்கேற்பு - காலை 4.40.
- பாட்மிண்டன்: ஆண்களுக்கான ஒற்றையர் போட்டி - கால்இறுதிக்கு முந்தைய சுற்றில்கோபிசந்த் பங்கேற்பு - பிற்பகல் 2.00.
- பளுதூக்குதல்: பெண்களுக்கான 69 கிலோ எடைப் பிரிவில் கர்னம் மல்லேஸ்வரிபங்கேற்பு - பிற்பகல் 1.00.
- ஹாக்கி: ஆண்கள் பிரிவு - குரூப் பி லீக் போட்டி - ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணிமோதல் - பிற்பகல் 3.00.












Click it and Unblock the Notifications