சென்னை வந்தார் கர்நாடக அமைச்சர்
சென்னை:
கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை பிற்பகல்சென்னை வந்தார்.
அவருடன் கர்நாடக உள்துறைச் செயலாளர் பிரசாத், போலீஸ் ஐஜி ஸ்ரீனிவாஸ்ஆகியோரும் சென்னை வந்துள்ளனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் பிடியிலிருந்து கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பது குறித்துதமிழக முதல்வர் கருணாநிதியுடன அவர்கள் ஆலோசனை செய்வார்கள் என்றுதெரிகிறது.
ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்று 50 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. வீரப்பன்கோரிக்கையை நிறைவேற்றுவதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ராஜ்குமாரை வீரப்பன் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே,மூன்று முறை அரசுத் தூதராக காட்டுக்குள் சென்று வீரப்பனைச் சந்தித்தார் நக்கீரன்கோபால்.
ஆனால் மூன்று முறையும் அவரால் ராஜ்குமாரை விடுவிக்க முடியவில்லை. மாறாககாட்டுக்குள் இருந்து வீரப்பன், ராஜ்குமார், வீரப்பனுடன் உள்ள தமிழ்த் தீவிரவாதிகள்பற்றிய தகவல்களை அவர் கொண்டுவந்தார்.
வீரப்பனின் கோரிக்கைகளில் ஒன்றான தடா கைதிகள் விடுதலை மற்றும் தமிழ்த்தீவிரவாதிகள் விடுதலை தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில்உள்ளன.
இந் நிலையில், தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்க கர்நாடக அமைச்சர்சென்னை வந்திருப்பது மிகவும் முக்கிய விஷயமாகக் கருதப்படுகிறது.
சென்னை வந்ததற்கான காரணத்தைக் கேட்டபோது அதை தமிழக முதல்வருடன்பேசியபிறகு தெரிவிப்பதாக கார்கே தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications