கட்சியாகிறது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு
திருவண்ணாமலை:
இந்த ஆண்டு டிசம்பர் மாதததிற்குள் விடுதலை சிறுத்தை அமைப்பு அரசியல் கட்சியாகமாற்றப்படும என அக்கட்சியின் மாநில அமைப்பாளர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் நடைபெற்றநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் போலீசார் வன்முறை தடுப்புச் சட்டத்தை சரியான முறையில்நடைமுறைப்படுத்தவில்லை. ஆனந்தல், சீனந்தல் பகுதிகளில் இன்னமும் இரட்டை டம்ளர்முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்.
போளூருக்கு அருகில் உள்ள படியம்பட்டில் விஷசாராயம் அருந்தி இறந்தவர்கள்குடும்பங்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இந்த சம்பவம்தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தலித்துகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தில் ஒன்றரை கோடிககும் அதிகமான தலித் வாக்காளர்கள் உள்ளனர். மக்கள்கூட்டணி ஆட்சியைத்தான் விரும்புகின்றனர். நாங்களும் அதைத்தான் ஆதரிக்கிறோம்.
நாங்கள் நாட்டை ஆள ஆசைப்படவில்லை. ஆட்சியில் பங்கு பெற விரும்புவதில் தவறுஎதுவும் இல்லை என நினைக்கிறோம்.
கூட்டணி ஆட்சி ஏற்படாமல் தடுக்க, கூட்டணியை உடைக்க ஆளும் கட்சி சதி செய்கிறது.அதை அ.தி.மு..க., காங்கிரஸ் கட்சிகள் இணைந்து முறியடிக்க வேண்டும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் விடுதலை சிறுத்தை அமைப்பு அரசியல் கட்சியாக மாற்றப்படும்என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications