தமிழ் இணையப் பல்கலை: முதல்வர் ஆலோசனை
சென்னை:
தமிழ் இணையப் பல்கலைக் கழகம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர்கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
சென்னையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்முரசொலி மாறன், மாநில தகவல் தொழில்நுட்ப பணி முனைப்புக் குழு துணைத்தலைவர் டாக்டர் அனந்தகிருஷ்ணன், தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தலைவர்டாக்டர் வா.செ. குழந்தைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பிற மொழிச் சூழலில் வளரும் தமிழ்க்குழந்தைகள், பிற மொழிச் சூழலில் இருக்கும் வயது வந்த தமிழ் அறியா தமிழர்கள்மற்றும் தமிழ் கற்க விரும்பும் பிற மொழியினர் ஆகியோருக்கு அடிப்படைக் கல்வி,நடுநிலைக் கல்வி, உயர் நிலைக் கல்வி போன்ற தொடக்க தமிழ்க் கல்வி வழங்குதல்,சான்றிதழ் பட்டயம், பட்டப்படிப்புகள் ஆகியவற்றுக்குத் தேவையானபாடத்திட்டங்களை வகுத்தல், நூலகத் தகவல் பணிகளை உருவாக்குதல்போன்றவற்றில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இதுவரை மேற்கொண்டுள்ளபணிகள் பற்றி இக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications