ராம்தாஸ் மீது தாக்குதல்: புதுவையில் பந்த்
புதுவை:
புதுவையில் ஞாயிற்றுக்கிழமை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்ற கார் தாக்கப்பட்டதைக் கண்டித்து பா.ம.க.முழு அடைப்புக்குஅழைப்பு விடுத்துள்ளது. இந்த பந்திற்கு முழு ஆதரவு கிடைத்துள்ளது.
இந்த முழு அடைப்பையடுத்து புதுவையில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்க புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது.
சாலைகள் பஸ் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் கிடந்தன. சாலைகளில் பஸ், டாக்சி, ஆட்டோக்கள் எதுவும் ஓடவில்லை. கடைகள் எதுவும்திறக்கப்படவில்லை. அரசு அலுவலகங்களில் சொற்ப ஊழியர்களே வந்துள்ளனர்.
முன்னதாக, டாக்டர் ராமதாஸ் சென்ற கார் தாக்கப்பட்ட அபிஷேகப்பாக்கம் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக 200 க்கும்மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அபிஷேகப்பாக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் கொடியேற்ற முயன்றபோது 1000 க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்றுஅவர் சென்ற கார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் ராமதாஸ் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
அவருடன் வந்த புதுவை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மஞ்சினி உள்பட 15 பேர் காயமடைந்தார். இச்சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள்தான்காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கொடுத்த புகாரையடுத்து போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications