4 மாதத்தில் 2,758 சாலை விபத்துகள்- 3,007 சாவுகள்
சேலம்:
2000 மாவது ஆண்டு தமிழகத்தில் நடந்த சாலை விபத்துக்களில் 3007 பேர் இறந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 2 ஆயிரத்து 758 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் டிரைவர்களின் கவனக்குறைவால் நடந்த விபத்துக்களின்எண்ணிக்கை 2 ஆயிரத்து 663.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் டிரைவர்களின் கவனக்குறைவினாலேயே விபத்துக்கள் ஏற்படுகின்றன. ஒரு சில டிரைவர்களைத் தவிர பெரும்பாலானடிரைவர்கள் குடித்துவிட்டே பஸ்சை ஓட்டுகின்றனர்.
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிக்கு வரும் லாரி, பஸ் டிரைவர்கள் குடித்துவிட்டுத்தான் பஸ் அல்லது லாரியை ஓட்டுகின்றனர். இதனால் நாளுக்குநாள்விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பலியாவது அப்பாவி மக்கள்தான்.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் (சேலம் பிரிவு):
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டம்: 2 வெளியிட்டுள்ள அறிக்கை:
97-98ம் வருடம்: 419 விபத்துக்கள்: 66 பேர் பலி.
98-99 ம் வருடம்: 423 விபத்துக்கள்: 71 பேர் பலி.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டம்:1 வெளியிட்டுள்ள அறிக்கை:
97-98ம் வருடம்: 757 விபத்துக்கள்: 97 பேர் பலி.
98-99 ம் வருடம்: 681 விபத்துக்கள்: 114 பேர் பலி.
தனியார் பஸ் விபத்துக்கள் குறைவே:
அரசு பஸ்கள் ஏற்படுத்திய விபத்துக்களை விட தனியார் பஸ்கள் ஏற்படுத்திய விபத்துக்கள் மிகக் குறைவுதான்.
லைசென்ஸ் ரத்து ஆணை:
விபத்துக்களை தடுத்து நிறுத்துவதற்காக தமிழக அரசு கடந்த ஜனவரி 14 ம் தேதி லைசென்ஸ் ஆணையைப் பிறப்பித்தது.
அதன்படி, விபத்துக்களை ஏற்படுத்திய டிரைவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் லைசென்ஸ் பறிக்கப்படும்.
நடந்த விபத்துக்கு டிரைவர்கள்தான் காரணம் என்று தெரிய வந்தால் அந்த டிரைவர்களின் லைசென்சை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவோ அல்லது ரத்துசெய்யவோ செய்யப்படும் என்று ஆணை பிறப்பித்தது.
இதை எதிர்த்து போக்குவரத்துக் கழகங்களின் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தியது. இதையடுத்து லைசென்ஸ் ஆணை வாபஸ் பெறப்பட்டது.
தமிழகத்தில் கவனக்குறைவாக வண்டி ஓட்டி ஒருவரோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோரோ இறக்க நேர்ந்தால் அந்த பஸ் அல்லது லாரியின்டிரைவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
அப்படி ஆஜர்படுத்தப்படும் டிரைவர் ரூ 5000 முதல் 8000 வரை அபராதம் கட்டினால் வெளியே வந்துவிடும் நிலை உள்ளது. அவர்கள் விபத்தும்ஏற்படுத்தும் விதம் மற்றும் வண்டி ஓட்டிய விதத்தைப் பொறுத்து அபராதத் தொகை மாறுபடும்.
தண்டனை அவசியம்:
பிற மாநிலங்களில் விபத்து ஏற்படுத்தினால் அந்த விபத்தில் தொடர்புடைய டிரைவர்களுக்கு ஒரு மாத சிறைத்தண்டனை அளிக்கப்படுகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் இதே போல் சிறைத்தண்டனை அளிக்கப்படவில்லை. தமிழக அரசு தலையிட்டு விபத்து ஏற்படுத்தும் டிரைவர்களுக்கு குறைந்தபட்சம்ஒரு மாதமாவது சிறைத் தண்டனை அளிக்க வேண்டும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications