பிரேஸில் நாட்டில் ஒரே நாளில் 206 கைதிகள் தப்பியோட்டம்
சாவோ பாலோ:
தென் அமெரிக்க நாடான பிரேஸில் நாட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 206கைதிகள் தப்பியோடிவிட்டனர்.
துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்கள் அதிரடியாக சிறைகளில் நுழைந்து கைதிகளைவிடுவித்தனர். சாவோ பாலோ நகரில் உள்ள 3 சிறைகளில் திங்கள்கிழமை இச்சம்பவங்கள் நடந்தன.
சுமேர் என்ற பகுதியில் உள்ள சிறைக்குள் ஆயுதம் தாங்கிய 10 கமாண்டோக்கள்சிறைக்குள் நுழைந்து அங்கு அடைக்கப்பட்டிருந்த கொடிய கைதிகள் 92 பேரைவிடுவித்தனர்.
இதேபோல் மற்ற இரு சிறைகளில் இருந்து மொத்தம் 114 கைதிகள்விடுவிக்கப்பட்டனர்.
பிரேஸில் நாட்டில் சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிப்பது அன்றாடம் நடக்கும்சம்பவமாகும். ஆனால் ஒரே நாளில் கொடிய கைதிகள் உள்பட 206 பேர்ஒட்டுமொத்தமாக தப்பியிருப்பது இதுவே முதல் முறை.
தப்பிச் செல்ல முயன்ற கைதிகளைத் தடுக்க முயன்ற ஒரு போலீஸ் அதிகாரிதாக்கப்பட்டு படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கைதிகள் தப்பிச் சென்றது குறித்து தகவல் கிடைத்ததும் சாவோ பாலோ நகரம்முழுவதும் போலீஸார் தேடுதல்வேட்டை நடத்தினர். இதில் தப்பித்த கைதிகளில் 13பேர் மட்டுமே மீண்டும் பிடிபட்டனர்.
சாவோ பாலோவில் உள்ள சிறைகளில் 10 ஆயிரம் கைதிகளை மட்டுமே அடைத்துவைத்திருக்கமுடியும். ஆனால், கொள்ளளவை விட இரு மடங்குக்கும் மேலாக அங்குகைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனால், சிறைக்குள் வன்முறைச் சம்பவங்களும், கைதிகளிடையே அடிக்கடிமோதலும் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பிரேஸில் சிறைகளுக்குச் சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கமிஷன் குழுவின் தலைவர் நைகல் ராட்லி, பிரேஸில் சிறைகளைப் போல ஒருகொடுமையான, மோசமான சிறைகளை உலகில் வேறு எங்கும் பார்த்ததில்லை என்றுகூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications