பாரதீய ஜனதாவில் ப. சிதம்பரம்?
சென்னை:
ப. சிதம்பரம் பாரதீய ஜனதாவில் சேர முன்வந்தால் வரவேற்போம் என அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் முக்கியத் தலைவராக இருந்த சிதம்பரம், மூப்பனாருடன் சேர்ந்து தமிழ் மாநில காங்கிரசை நிறுவியர்களில்முக்கியப் பங்கு வகித்தார்.
மத்தியில் வர்த்தக அமைச்சராக, நிதிமைச்சராகப் பணியாற்றியவர். 13 ஆண்டுகள் தொடர்ந்து சிவகங்கை எம்.பியாகவும்இருந்தவர். கடந்த தேர்தலில் முதல்முறையாகத் தோற்றார்.
ஆனால், ஜெயலலிதாவுடன் கூட்டணி என்று மூப்பனார் முடிவெடுத்ததைத் தொடர்ந்து கட்சி நடவடிக்கைளில் இருந்து சிதம்பரம்ஒதுங்கியே இருந்து வந்தார். சமீபத்தில் சிதம்பரத்தில் நடந்த த.மா.கா. மாநாட்டையும் சிதம்பரம் புறக்கணித்தார்.
இந் நிலையில் அவர் பாரதீய ஜனதாவில் சேர உள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அவர் எங்களுடன் சேர வந்தால்,வரவேற்போம் என்று பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி. மாத்தூர் கூறியுள்ளார். அதே நேரத்தில் இப்போது அவர் எங்களுடன்இணைவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
ஆனால், சிதம்பரம் பா.ஜ.கவில் சேர்ந்து திருச்சி எம்.பி. தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள்வெளியாகியுள்ளன. திருச்சியில் பாரதீய ஜனதா எம்.பியாக இருந்த மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம்மறைந்தையடுத்து அந்தத் தொகுதி காலியாக உள்ளது.
இது குறித்து சிதம்பரத்தைத் தொடர்பு கொள்ளவும் பத்திரிக்கையாளர்களால் முடியவில்லை. அவரது வீட்டுக்கு தொலைபேசியில்தொடர்பு கொண்ட நிருபர்களுக்கு, சிதம்பரம் இப்போது வீட்டில் இல்லை என்றே பதில் கிடைத்து வருகிறது.
1996ம் ஆண்டில் குமாரமங்கலத்தோடு, சிதம்பரமும் தான் பாரதீய ஜனதாவில் சேர முன்வந்தார். ஆனால், கடைசியில்பின்வாங்கிவிட்டார் எனவும் பாரதீய ஜனதா கட்சித் தலைவர் மாத்தூர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications