நீதிமன்றத்தை எட்டிய அதிமுக-காங்கிரஸ் லடாய்
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கும், அதிமுகவுக்கும் இடையே நடைபெற்று வந்த அறிக்கை போர் இப்போது நீதிமன்றவிவகாரமாகி விட்டது.
அதிமுக பற்றி இளங்கோவன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது. இளங்கோவன் மன்னிப்புக் கேட்க வேண்டும் இல்லையேல் மானநஷ்ட ஈடு வழக்குத் தொடரப்படும் என்று அந்தமனுவில் அதிமுக கூறியுள்ளது.
சந்தன வீரப்பன் விவகாரத்தில் இளங்கோவனும், அதிமுக அவைத் தலைவர் காளித்துவும் அறிக்கைகள் மூலம் விளாசிக் கொண்டனர். ஒருகட்டத்தில் இளங்கோவனை கடுமையாக எச்சரித்த காளித்து, "இப்படியெல்லாம் பேசினால் வெளியில் நடமாட முடியாது என்றுகூறியிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுத்த இளங்கோவன், "ஒருவேளை தர்மபுரியில் பஸ்சில் சென்ற விவசாயக் கல்லூரி மாணவிகள் உயிருக்கு உத்தரவாதம்இல்லாதபோது, நான் நடமாடினால் எனக்கும் ஏதாவது ஆகிவிடுமோ என்ற நல்லெண்ணத்தில் காளித்து அவ்வாறு கூறியிருக்கலாம்.ஆனால், நான் விவசாயக் கல்லூரி மாணவி அல்ல என்று கிண்டலாக தாக்கியிருந்தார்.
(ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதைக் கண்டித்து ஒரு கும்பல் வைத்த நெருப்பில் அந்த மாணவிகள் எரிந்துபோனவேதனைச் சம்பவத்தை நினைவுகூர்க)
இதை ஆட்சேபித்து காளித்து மீண்டும் அறிக்கை வெளியிட்டார். அதன் பிறகும் அதிமுகவின் ஆவேசம் அடங்கவில்லை. அதிமுகவின்வழக்கறிஞர் பிரிவு சார்பில் பிலிப்தாமஸ் என்பவர், இளங்கோவன் இப்படி சொன்னதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மனுத் தாக்கல்செய்துள்ளார்.
தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் பஸ் எரிப்பில் மாணவிகள்பலியான சம்பவத்திற்கு அதிமுக தான் காரணம் என்பது போல் இளங்கோவன் தெரிவித்திருப்பது அவதூறானது என்று மனுவில்கூறப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications