நரபலி ஆசிரமம் புல்டோசர் மூலம் இடிப்பு
மதுரை:
மதுரை நரபலி சாமியாரின் ஆசிரமம் "புல்டோசர் உதவியுடன் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
அங்குலம் அங்குலமாக தோண்டிப் பார்த்தும் எந்த பிணம் கிடைக்கவில்லை.
30க்கும் மேற்பட்டவர்களை நரபலி கொடுக்கப்பட்ட அழகாபுரி ஆசிரமத்தில் பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறியும்பணி இரண்டு நாட்களாக நடைபெற்றது.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் முதலில் கம்பிகள் மூலம் துளையிட்டு பிணங்கள் இருக்கிறதா என்று சோதனையிட்டனர். அதில் எந்த தடயமும்கிடைக்கவில்லை.
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை கண்காணிப்பாளர் சுந்தரராஜன், தடயவியல் துறை துணை இயக்குனர் விஜயகுமார், போலீஸ் துணைகண்காணிப்பாளர் நாராயணசாமி, மதுரை அரசு மருத்துவமனை டாக்டர் தியாகராஜன் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டனர்.
இதில் பொதுமக்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. எதிர்ப்பு தெரிவித்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் தோண்டும் பணி பாதியில்நிறுத்தப்பட்டது. செவ்வாய்கிழமை காலை டி.ஐ.ஜி. ஜாங்கிட், ஆர்.டி.ஓ. நந்தகோபால் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் தோண்டும் பணிதொடங்கியது.
ஆசிரமக் கூரையை முதலில் அப்புறப்படுத்தினர். பிறகு பூஜை அறையில் இருந்த காளி மற்றும் சுவாமி படங்கள் அகற்றப்பட்டன. காளிசிலையும் அகற்றப்பட்டது.
ஆசிரமம் மற்றும் பூஜை அறை "புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டது. ஜே.சி.பி. இயந்திரம் மூலம் பூஜை அறை முழுவதும்தோண்டப்பட்டது. அங்கு பிணங்கள் புதைக்கப்பட்ட தடயம் எதுவும் இல்லை.
பலி பீடமும் அதேபோல் இடித்துத் தள்ளப்பட்டு, இயந்திரம் மூலம் தோண்டப்பட்டது. பூஜை அறையும், பலி பீடமும் அங்குலம்அங்குலமாக தோண்டி பார்க்கப்பட்டது.
மேலும் சந்தேகத்திற்கிடமான 9 இடங்களும் தோண்டப்பட்டன. எந்த இடத்திலும் பிணங்கள் கிடைக்கவில்லை.
எனவே தோண்டும் பணி முடித்துக் கொள்ளப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications