குதிரையேற்றம்: 3-வது முறையாக தங்கம் வென்றது ஆஸ்திரேலிய அணி
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் குதிரையேற்றத்தில் அணிப் பிரிவில் ஆஸ்திரேலியாவுக்குத் தங்கம் கிடைத்தது.
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் குதிரையேற்றத்தில் ஆஸ்திரேலிய அணிதங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பார்சிலோனா, அட்லாண்டா ஒலிம்பிக்குகளில் ஆஸ்திரேலியாதங்கம் வென்றது.
3 நாட்கள் நடந்து செவ்வாய்க்கிழமை முடிவுற்ற இப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மொத்தம்146.80 புள்ளிகள் எடுத்தது.
161.00 புள்ளிகள் எடுத்த இங்கிலாந்துக்கு வெள்ளிப் பதக்கமும், 175.80 புள்ளிகள் எடுத்தஅமெரிக்காவுக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்தது.
இப் போட்டியில் மொத்தம் 12 நாடுகள் கலந்து கொண்டன. ஆனால், இறுதி வரை 6 நாடுகள்மட்டுமே பங்கேற்றன.












Click it and Unblock the Notifications