சென்னை கம்ப்யூட்டர் வல்லுனரை கோலகலமாய் வரவேற்ற ஜெர்மனி

Subscribe to Oneindia Tamil

பெர்லின்:

சென்னையைச் சேர்ந்த விவேக் பாரத்வாஜ் என்பவர் ஜெர்மனியில் முதல் கிரீன் கார்ட்பெற்று வேலை பார்க்க சென்றிருப்பவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சமீபத்தில் தான் ஜெர்மனிய அரசு அயல் நாட்டவர்களை பணிக்கு அமர்த்திக் கொள்ளஅனுமதித்தது. அதன்படி முதன்முதலில் ஜெர்மனிக்கு வந்திருப்பவர் பரத்வாஜ். 23வயதான அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு அவரை மிகவும் கூச்சப்பட வைத்தது

பரத்வாஜ் ஜலந்தர் பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர். இவர் தனதுசென்னையில் உள்ள தனது நிறுவனத்தின் சார்பாக ஜெர்மன் வந்துள்ளார். அவருக்குபெர்லினில் ஒரு வீட்டை வாடகைக்கு ஏற்பாடு செய்துள்ளது அவரது நிறுவனம்.

டாடாங்கோ என்பது ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்ட புதிய இன்டர்நெட்நிறுவனமாகும். இங்கு 50 பேர் பணிபுரிகிறார்கள். இந்த நிறுவனம் இந்த வருடகோடை காலத்தின் போது இந்தியாவில் தங்கள் நிறுவனத்துக்கு பணியாளர்களைதேர்வு செய்ய நேர்முகத்தேர்வு நடத்தியது. அதில் விவேக் பரத்வாஜ் தேர்வுசெய்யப்பட்டார்.

பரத்வாஜ் வெள்ளிக்கிழமை பெர்லின் வந்தபோது டாடாங்கோவின் மனிதவளமேம்பாட்டுத் துறையின் அதிகாரி பெட்ரோ ஹிட்சிக் மலர்க் கொத்துக்களுடன்பரத்வாஜை வரவேற்க விமான நிலையத்தில் ஆவலுடன் காத்திருந்தார்.

அவருடன் அங்கு வேலை பார்க்கும் சில இந்தியர்களும் பரத்வாஜுக்கு புதியசூழ்நிலை மூலம் எந்த விதமான சிரமமும் ஏற்படாமல் உதவுவதற்காகக் காத்திருந்தனர்.

பரத்வாஜுக்கு ஹிட்சிக் மலர்க் கொத்தைக் கொடுத்தபோது பத்திரிக்கையாளர்களின்பிளாஷ் ஒளியில் பரத்வாஜ் நனைந்தார்.

இந்த வரவேற்பினால் பரவசமடைந்த பரத்வாஜ் நிருபர்களிடம் கூறுகையில், தான்இத்தகைய வரவேற்பு பெறுமளவு சாதனை எதையும் செய்துவிடவில்லை எனக்கூறினார்.

பரத்வாஜ் ஜெர்மனியில் உள்ள நிறவேறுபாடுகளைபற்றி கவலைப்படவில்லை. மிகவும்மகிழச்சியாக இருக்கும் வர் தனது பணி சிறப்பாக அமைந்தால் வாழ்நாள் முழுவதும்இங்கேயே தங்கிவிடுவேன் என்றார்.

ஆனால் அது இயலாது. ஏனென்றால் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் கிரீன் கார்டு 5வருடம் மட்டுமே செல்லுபடியாகும்.

டாடாங்கோ நிறுவனம் பரத்வாஜ்தான் இந்தியாவிலிருந்து ஜெர்மனியின் தலைநகருக்குகிரீன்கார்டு பெற்று வரும் முதல் கம்ப்யூட்டர் வல்லுநர் எனக் கூறினாலும் இவர்தான்இந்தியாவிலிருந்து கிரீன்கார்ட் பெற்று ஜெர்மனி வந்துள்ள இந்தியர் என கூறமுடியாது.

பரத்வாஜைத்தவிர மேலும் ஏழு பேருக்கு ஜெர்மன் அரசு கிரீன்கார்ட் வழங்கியுள்ளதாகதெரிகிறது. ஆனால் அவர்கள் ஏழு பேரும் ஜெர்மனிக்கு வந்து விட்டார்களா எனதெரியவில்லை.

ஜெர்மனியின் சட்டப்படி அவர்கள் வழங்கும் கிரீன்கார்ட் பெற்றவர்கள் 5 வருடம்மட்டுமே ஜெர்மனியில் பணிபுரிய முடியும். அதன்படியே பரத்வாஜ் ஜெர்மனிக்குபணிபுரியச் சென்றுள்ளார். ஆனால் அமெரிக்காவில் கிரீன்கார்ட் பெற்றால் அவர்கள்வாழ்நாள் முழுவதும் அங்கு இருக்கலாம்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+