கார்கில் ஊடுருவலை வெளிப்படுத்திய ராணுவ கமாண்டருக்கு நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின ஊடுருவல்இருப்பதாக கார்கில் போருக்கு முன்னதாக எச்சரித்த அப் பகுதி கமாண்டருக்கு இந்தியராணுவம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் கார்கில் பகுதிக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். கார்கில் மலைப்பகுதியில்பாகிஸ்தான் தீவிரவாதிகள் தங்கள் நிலையை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு இந்தியராணுவத்தினர் மீது கடுமையான தாக்குதலை நடத்தினர்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் இந்த நடவடிக்கையை வெகு தாமதமாக உணர்ந்து கொண்டஇந்திய ராணுவம், தீவிரவாதிகள் மீது கடுமையான பதில் தாக்குதலை நடத்தினர். இருதரப்பிலும் கடுமையான சண்டை நடந்தது.

பல நாட்கள் நீடித்த இப் போரில் இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டது. இறுதியில்கார்கில் பகுதியில் ஆக்கிரமிப்பை விட்டுவிட்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஓடிவிட்டனர்.

இந் நிலையில், கார்கில் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 121 இன்பான்ட்ரிபிரிகேட் அல்லது கார்கில் பிரிகேட் என்று அழைக்கப்பட்ட ராணுவப் பிரிவுக்குகமாண்டராக இருந்த சுரீந்தர் சிங்குக்கு இந்திய ராணுவம் இப்போது நோட்டீஸ்அனுப்பியுள்ளது.

கார்கில் போர் தொடங்குவதற்கு பல நாட்களுக்கு முன்பே கார்கிலில் பாகிஸ்தான்தீவிரவாதிகளின் ஊடுருவல் உள்ளது. கூடுதலாக பாதுகாப்புப் படையை அனுப்பிவைக்கவேண்டும் என்று இந்திய ராணுவத் தலைமைக்கு சுரீந்தர் சிங் பல முறைஎச்சரிக்கைத் தகவல் அனுப்பினார்.

ஆனால், அந்த தகவல்களை ராணுவத் தலைமை கண்டுகொள்ளவில்லை. இறுதியில்பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகமாகி கார்கில் போர் நடந்துமுடிந்துவிட்டது.

தீவிரவாதிகள் ஊடுருவல் பற்றி தான் எச்சரித்தது பற்றியும், ராணுவத் தலைமை அதைக்கண்டுகொள்ளவில்லை என்பதையும் சுரீந்தர் சிங் பல பத்திரிக்கைகளில் விளக்கியுள்ளார்.அதற்கு ஆதாரமாக தான் எழுதிய கடிதங்களையும் அவர் வெளியிட்டார்.

ஆனால், இப்போது அவருக்கு ராணுவம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கார்கில் பகுதியில்பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்கத் தவறிய உங்கள் மீது ஏன் நடவடிக்கைஎடுக்கக்கூடாது என்பதற்கு விளக்கம் கேட்டு இந்த நோட்டீஸை சுரீந்தர் சிங்குக்கு ராணுவம்அனுப்பியுள்ளது.

இந்த நோட்டீஸுக்கு ஒரு மாதத்துக்குள் பதில் தெரிவிக்கும்படியும் அந்த நோட்டீஸில்குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்கில் போருக்குப் பின் கார்கில் பகுதியிலிருந்து பல இடங்களுக்கு இடமாற்றம்செய்யப்பட்ட சுரீந்தர் சிங் தற்போது பிகார் மாநிலத்தில் ராஞ்சியில் உள்ள இன்பேன்ட்ரிபிரிவுக்கு கமாண்டராக உள்ளார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+