காஷ்மீரில் 14 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரில் மூன்று இடங்களில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 14 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.திங்கள்கிழமை இச்சம்பவம் நடந்ததாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அவர் மேலும் இதுகுறித்துக் கூறுகையில், பூஞ்ச் மாவட்டம் அங்கன் பத்ரி பகுதியில் ராணுவ வீரர்கள், தீவிரவாதிகள்பதுங்கியிருந்த பதுங்கு குழிகளில் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் 10 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இவர்கள் ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாதஅமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
வெளிநாட்டுத் தீவிரவாதிகள் அதிகம் உள்ள பகுதியான சூரன்கோட்டே பகுதியில் நடந்த தாக்குதலில் 2தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதே போல் உதம்பூர் மாவட்டத்தில் மாகூரில் ஒரு தீவிரவாதியும், தோடா மாவட்டத்தில் பதேர்வாவில் ஒருதீவிரவாதியும் கொல்லப்பட்டனர் என்றார் ராணுவ செய்தித் தொடர்பாளர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications