பாகிஸ்தானில் பழ மார்க்கெட்டில் குண்டு வெடித்து 13 பேர் சாவு
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பழ மார்க்கெட்டில்செவ்வாய்க்கிழமை காலை சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 13 பேர் பலியானார்கள்58 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
அண்டை நாடான ஆப்கானிஸ்தானிலிருந்து ஏராளமான திராட்சைப் பழக்கூடைகள்இஸ்லாமாபாத் பழ மார்க்கெட்டில் வைக்கப்பட்டிருந்தன. ஏலம் விடுவதற்காகவைக்கப்பட்டிருந்த இந்த பழக் கூடைகளில் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டுதிடீரென்று வெடித்தது.
இதில் திராட்சைப் பழக்கூடைகளை ஏலம் வாங்க வந்தவர்கள் 13 பேர் இறந்தனர். 58பேருக்கு மேல் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலருடைய நிலை மிகவும் மோகமாக உள்ளது. அதனால்,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று இஸ்லாமாபாத் நகரமுதுநிலை போலீஸ் கண்காணிப்பாளர் நசீர் கான் துரானி தெரிவித்தார்.
இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. மேலும்யார் குண்டு வைத்தது என்றும் தெரியவில்லை என்றார் அவர்.
இந்த மாதத்தில் பாகிஸ்தான் நகரத்தில் நடக்கும் மூன்றாவது குண்டு வெடிப்பு இது.ஏற்கெனவே இம் மாத தொடக்கத்தில் லாகூரில் இரு இடங்களில் குண்டு வெடித்ததில் 8பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications