கர்நாடகத் தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு தரும்படி, கர்நாடக தமிழர் சங்கம்செவ்வாய்க்கிழமை கவர்னர் ரமாதேவியைச் சந்தித்து மனு கொடுத்தது.
இதுகுறித்து கர்நாடக தமிழர் சங்கத் தலைவர் ஆர்.எஸ்.மாறன் கூறியதாவது:
ஜூலை 30 ம் தேதி கன்னட நடிகர் ராஜ்குமார், சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டார். இதையடுத்து பெங்களூர் உள்பட கர்நாடகத்தில் பலமாவட்டங்களில் வாழும் தமிழர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டம் மற்றும் கர்நாடக, தமிழக எல்லைப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று எப்போதும் மக்கள் பதட்டத்துடன் காணப்படுகின்றனர். கலவரத்தில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைதுசெய்து, தமிழர்களுக்கு போதிய பாதுகாப்பை அளிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும்.
தேவைப்பட்டால் பிற மாநிலங்களிலிருந்து போலீஸாரை வரவழைத்து, கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
வீரப்பன், ராஜ்குமாரை கடத்தியதற்காக கர்நாடகத்தில் வாழும் தமிழ் மக்களைத் துன்புறுத்துவதில் எந்த பயனும் இல்லை.
இந்தக் கடத்தல் சம்பவத்தைக் கண்டித்து, பல்வேறு தமிழர் அமைப்புக்கள் கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் பேரணிகளும், ஊர்வலங்களும் நடத்தியுள்ளனஎன்பது குறிப்பிடத்தக்கது.
இக்கடத்தல் சம்பவத்தால் கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் தாக்கப்படுவது மிகவும் வேதனையான விஷயம். இதில் கவர்னர் ரமாதேவி தலையிட்டு,கர்நாடகத்தில் வாழும் மொழிச் சிறுபான்மையினரான தமிழர்களுக்குப் போலீஸ் பாதுகாப்பு தர உத்தரவிட வேண்டும் என்றார் மாறன்.
யு.என். ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications