நீச்சல்: மெதுவாக நீந்தி "சாதனை" படைத்த கினியா வீரர்
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் மெதுவாக நீந்தி சாதனை படைத்தார் எரிக் மெளசாம்பனி.
மெற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவைச் சேர்ந்த 22 வயதான இவர், திங்கள்கிழமை நடைபெற்றஆண்களுக்கான 100 மீட்டர் நீச்சல் பிரிவில் கலந்து கொண்டார்.
மொத்தம் உள்ள 10 சுற்றுக்களில் இவர் முதல் சுற்றில் கலந்து கொண்டார். இவர் பந்தையதூரத்தைக் கடக்க 1 நிமிடம் 52.72 விநாடிகள் எடுத்துக் கொண்டார்.
இது 200 மீட்டர் தூரத்தை ஹாலந்து வீரர் பீட்டர் வான் டென் ஹூகென்பாண்ட் உலக சாதனையுடன் நீந்திக்கடந்த 1 நிமிடம் 45.35 விநாடிகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
50 மீட்டர் அளவு நீச்சல் குளத்தை இதற்கு முன் கண்டிராத அவர் முதன்முறையாக ஒலிம்பிக்கில் கலந்துகொண்டார். பந்தைய தூரத்தை மற்ற வீரர்கள் கடந்து முடிந்துவிட்ட நிலையில் இவர் மட்டும்மெதுவாக நீந்திக் கொண்டிருந்தார்.
இப்படி மெதுவாக நீந்தியதை நினைத்து அவரே சற்று வெட்கப்பட்டிருக்கலாம் என்றாலும் நீச்சல்போட்டியைக் காணவந்திருந்த மக்கள் அனைவரும் கைதட்டி அவரை மேலும் உற்சாகப்படுத்தினர்.
கடந்த ஜனவரியிலிருந்துதான் அவர் நீச்சல் போட்டியில் கலந்து கொள்வதற்கான பயிற்சிகளைமேற்கொண்டார். அதுவும் 20 மீட்டர் நீளமுள்ள நீச்சல் குளத்தில்தான். 100 மீட்டர் தூரத்தை அவர் ஒரேமூச்சில் நீந்தியதில்லை. பலமுறை நீந்துவதை நிறுத்தி மூச்சை இழுத்து மீண்டும் நீந்தினார்.
சிட்னி ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் முதல் 3 நாட்களில் மட்டும் 9 உலக சாதனைகள்படைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மிகவும் வேகமாக நீந்திய சாதனைகள் நீந்திய நீச்சல் குளத்தில்மெதுவாக நீந்தி சாதனை படைத்துவிட்டார் மொளசாம்பனி.
மெளசாம்பனியின் இந்த சாதனையை வேறு யாராவது முறியடிப்பார்களா என்பது சந்தேகமே. இந்த"மெதுவான சாதனையை" படைத்த மெளசாம்பனி ஒரு விஷயத்தில் மிகவும் திருப்திப்பட்டுக்கொள்ளலாம்.
1896-ம் ஆண்டு நடந்த முதல் ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் 100 மீட்டர் பிரிவில் ஹங்கேரியின்அர்னால்டு கட்மான் எடுத்துக் கொண்ட நேரத்தை விட 30 விநாடிகள் குறைவாக மெளசாம்பனிநீந்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications