ராஜ்குமார் கடத்தல்: கர்நாடகத்தில் 30-ம் தேதி பந்த்
பெங்களூர்:
ராஜ்குமாரை விரைவில் விடுவிக்கக் கோரி கர்நாடகத்தில் 30-ம் தேதி முழு அடைப்புநடைபெறும் என கன்னட சலுவளி கட்சிக் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமானவட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
அவர் நிருபர்களிடம் கூறுகையில், ராஜ்குமார் கடத்தப்பட்டு 50 நாட்கள் ஆகிவிட்டன.ஆனால் ராஜ்குமாரை விடுவிக்கும் முயற்சியில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை.
கர்நாடக முதல்வர் கிருஷ்ணா பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார். ஆனால்ராஜ்குமார் விடுதலை குறித்து அவர் எதுவும் பேசுவதில்லை.
ராஜ்குமார் கடத்தப்பட்ட பின்பு இரு மாநில முதல்வர்களும் சந்தித்துப் பேசுகிறார்கள். அரசுதூதர் காட்டுக்குச் சென்று வருகிறார். ஆனால் எந்த விதமான பலனும் அதனால்ஏற்படவில்லை.
தமிழக முதல்வர் பெங்களூர் வந்து சென்ற பிறகு ராஜ்குமார் விடுதலைபற்றி ஒன்றுமேபேசவில்லை. ராஜ்குமார் கடத்தப்பட்டது தமிழகத்தில்தான். தொட்ட காஜனூர் பகுதியில்ராஜ்குமாருக்கு தமிழக அரசு தேவையான பாதுகாப்பு அளித்திருந்தால் இந்த கடத்தல்நிகழ்ந்திருக்காது.
அதனால் தமிழகம்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.ராஜ்குமாரை விடுவிக்கவேண்டியது அவர்கள் பொறுப்பு.
ராஜ்குமார் பாதுகாப்பு வேண்டாம் என்று கூறிய போதும் ராஜ்குமாருக்கு பாதுகாப்புஅளிக்காதது கர்நாடக அரசின் தவறு.
சாம்ராஜ் நகர் காட்டுப்பகுதியில் போலீஸ் காவல் இல்லாததால் தீவிரவாதிகள் சுதந்திரமாகநடமாடி வருகின்றனர்
ராஜ்குமாரை விரைவில் விடுதலை செய்யக் கோரி 30-ம் தேதி கர்நாடகத்தில் முழுஅடைப்பு நடைபெறும்.இந்த முழு அடைப்புக்கு 50 கன்னட சங்கங்கள் ஆதரவுதெரிவித்துள்ளன.
20-ம் தேதி சித்தூர் ராணி சென்னம்மா சிலை முன்பு அமைதியான முறையில் சத்தியாகிரகபோராட்டம் நடைபெறும் என வட்டாள் நாகராஜ் அறிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications