தமிழகத்தின் வட மாவட்டங்களில் தாண்டவமாடுகிறது வன்முறை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டாக்டர் ராமதாசை தாக்க முயன்ற சம்பவத்தை கண்டித்து பாமகவினர் வன்முறையில் ஈடுபட்டு வருவதால் தமிழகத்தின் வடமாவட்டங்களில் இரண்டாவது நாளாக செவ்வாய் கிழமையும் பஸ்கள் ஓடவில்லை.

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் ஒரு பஸ் கொளுத்தப்பட்டது. பஸ் மீது வன்றைக் கும்பல் கல்வீசி தாக்கியதில் பெண் ஒருவர்பலியானார். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பதட்டம் தொடர்கிறது.

பாமக தலைவர் ராமதாஸ் மீதான தாக்குதல் முயற்சியை கண்டித்து, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பாமகவினர் சாலை மறியலில்ஈடுபட்டனர். இதனால் பல இடங்களில் வன்முறை வெடித்தது. பஸ் போக்குவரத்தும் தடைப்பட்டது.

இரண்டாவது நாளாக பாமகவினர் வன்முறையில் ஈடுபட்டதால் கடலூர், பெரம்பலூர், விழுப்புரம், வேலூர், வந்தவாசி, காஞ்சிபுரம்,திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுளளது.

கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பஸ்கள் ஓடவில்லை. சில முக்கிய ஊர்களுக்கு மட்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்பஸ்கள் இயங்கின.

தமிழகத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சென்ற பஸ்கள் வேறுவழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து கடலூர் செல்லவேண்டிய பஸ் ஒன்று திண்டிவனம் அருகே வந்தபோது வன்றைக் கும்பல் அந்த பஸ் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியது. பஸ் கண்ணாடியைஉடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த கல் ஒன்று, பயணிகள் ரேவதி (28), அவரது கணவர் விநாயகமூர்த்தி, அவர்களின் 2 குழந்தைகள்மற்றும் கண்ணன் (40) ஆகியோர் தலையை பதம் பார்த்தது.

தலையில் பலத்த காயமடைந்த ரேவதி உடனடியாக விழுப்புரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் பரிதாபமாக இறந்தார்.அருகில் இருந்த அவரது கணவர் விநாயகமூர்த்தி உயிர் தப்பினார்.

காயமடைந்த மற்றொரு பயணி கண்ணன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பலியான ரேவதி பாண்டிச்சேரி சோலை நகரை சேர்ந்தவர். திருமண நிகழ்ச்சிக்காக சென்னை சென்று திரும்பிய போது இந்த சோக சம்பவம்நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+