பளுதூக்குதல்: இரு உலக சாதனைகளுடன் தங்கம் வென்றார் சீன மங்கை
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
பெண்களுக்கான 63 கிலோ எடைப் பிரிவில் சீன வீராங்கனை சென் ஸியாவோமின் 2உலக சாதனைகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் 23 வயதான அவர் மொத்தம் 242.5கிலோ எடை தூக்கி சாதனை படைத்தார். ஸ்நாட் பிரிவிலும் அவர் 112.5 கிலோ தூக்கிமற்றொரு சாதனையைப் படைத்தார். கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் அவர் 130 கிலோதூக்கினார்.
ரஷ்யாவின் வாலன்டினா போபோவா வெள்ளியும், கிரீஸ் நாட்டின் அய்யோன்னாசாட்ஸியோஅன்னாவ் வெண்கலமும் வென்றனர்.












Click it and Unblock the Notifications