விசுவாசம் என்றால் என்ன? அதிமுக விளக்குகிறது
சென்னை:
எம்.ஜி.ஆர். பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ள 6 மாஜிக்களுக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
விசுவாசம், நம்பிக்கை, நாணயமற்ற ஒரு கூட்டம் எம்ஜிஆர் விசுவாசிகளை ஒன்றுசேர்க்கப் போவதாகக் கூறி எம்.ஜி.ஆரின்பெயரால் ஒரு கட்சியை துவக்கி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
முதுகில் குத்துவதும், சோதனை காலங்களில் காட்டிக் கொடுப்பதும், உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வதும் மட்டுமே தமதுகொள்கையாக வைத்திருக்கிற ஒட்டுண்ணிகள் ஒன்று சேர்ந்திருப்பது ஒன்றும் புதிதல்ல என்றாலும் தங்களின் லாபத்துக்குஎம்.ஜி.ஆரன் பெயரை பயன்படுத்துவது மன்னிக்க முடியாத செயல்.
அரசியலில் நேர்மையற்ற, நாணயமற்றவர்கள் எப்படிப்பட்ட நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதற்கு கண்கண்ட சாட்சிகளாகஇருக்கும் எஸ்.டி.எஸ், பண்ருட்டி ராமச்சந்திரன், ராஜாராம், ராஜாமுகமது, வி.வி.சாமிநாதன் ஆகியோர் திடீரென்று இன்றுயோக்கியர்களாக அவதாரம் எடுத்துள்ளனர்.
எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் என்று கூறிக் கொள்வதற்கு அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? விசுவாசம் என்ற சொல்லின்அர்த்தமே அறியாதவர்கள் அவர்கள், பாவம்.
ஜானகி அணி, நால்வர் அணி, போட்டி அதிமுக, துரோகி ஆர்.எம்.வீரப்பன் அணி, நமது கழகம் என்று எல்லா இடங்களிலும்தாவி தாவி குதித்து எங்குமே நிலை கொள்ள முடியாத இவர்களுக்கு எம்.ஜி.ஆர். பெயரை உச்சரிக்கும் தகுதி கிடையாது என்றுகூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
