ஒலிம்பிக்கில் இந்தியா
Subscribe to Oneindia Tamil
இந்த மில்லேனியத்தின் முதல் ஒலிம்பிக் போட்டியான சிட்னி 2000 ஒலிம்பிக் போட்டியில் இதுவரை கலந்து கொண்ட அணிகளிலேயே பெரிய அணியை இந்தியா அனுப்பியுள்ளது. மொத்தம் 117 பேர் இதில் கலந்து கொள்கின்றனர்.
மொத்தம் உள்ள 31 விளையாட்டுப் பிரிவுகளில் 14 பிரிவுகளில் மட்டும் இந்தியா கலந்து கொள்கிறது. குறிப்பாக பதக்கம் கிடைக்கும் என்று நம்பப்படும் டென்னிஸ், ஹாக்கி, குத்துச்சண்டை, பளுதூக்குதல் ஆகிய பிரிவுகள் தவிர அதலெடிக்ஸ், பாட்மிண்டன், கால்பந்து, ஜூடோ, படகுப் போட்டி, பாய்மரப் படகுப் போட்டி, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் ஆகிய பிரிவுகளில் இந்தியா போட்டியிடுகிறது.
செப்டம்பர் 21-ல் இந்தியா கலந்து கொள்ள உள்ள போட்டிப் பிரிவுகள் விவரம்:
- ஹாக்கி : ஆண்களுக்கான பி பிரிவு ஆட்டம் - தென் கொரியாவுடன் இந்தியா மோதல் - காலை3.00 (இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெறும்).
- குதிரையேற்றம் : தனிநபர் டிரஸ்ஸேஜ் (3 நாள் விளையாட்டின் இரண்டாம் நாள்) - இம்தியாஸ் அனீஸ்பங்கேற்பு - காலை 4.30.
- டென்னிஸ் : பெண்களுக்கான இரட்டையர் ஆட்டம் - ஜெலீனா டோகிக் மற்றும் ரென்னே ஸ்டப்ஸ்ஜோடியுடன் இந்தியாவின் நிருபமா வைத்தியநாதன் மற்றும் மணிஷா மல்ஹோத்ராஜோடி மோதல் - கால 5.30.
- குத்துச்சண்டை : ஆண்களுக்கான 54 கிலோ பிரிவு - செர்கி டேனில்சென்கோவுடன் மோதுகிறார்இந்தியாவின் டிங்கோ சிங் - காலை 7.30.












Click it and Unblock the Notifications