காஞ்சி பட்டு வியாபாரிகளிடம் சோதனை: ரூ.80 கோடி பறிமுதல்
சென்னை:
காஞ்சிபுரத்தில் பிரபல பட்டு வியாபாரிகளிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். அவர்களிடம்இருந்து ரூ. 80 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்தை கணக்கில் காட்டாமல் அவர்கள் பதுக்கி வைத்திருந்தனர்.
பட்டுக்கு பெயர் பெற்றது காஞ்சிபுரம். தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பட்டு சேலைகள், வேட்டிகள் மொத்த விற்பனைதீவிரம் அடையும் நேரம் இது.
காஞ்சிப் பட்டுக்கு இந்தியா முழுவதுமே கிராக்கி உண்டு. எனவே பட்டு மொத்த வியாபாரிகள் கையில் கோடிக் கணக்கில் பணம்புரளும். ஆனால், விற்பனையை கணக்கில் காட்டாமல் வருமான வரித் துறையை சில வியாபாரிகள் ஏமாற்றுகின்றனர் என்றதகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அந்த வியாபாரிகளின் வீடுகளையும், விற்பனை நிலையங்களையும் அதிகாரிகள் கண்காணித்தனர். சிலநாட்களுக்கு முன் இந்த வியாபாரிகளின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக 3 முக்கிய பட்டு வியாபாரிகளின் வீடுகளில் மட்டும் கோடி கோடியாக கணக்கில் காட்டாத பணம் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் போலிப் பட்டுக்களை வியாபாரம் செய்து கோடிக் கணக்கில் கொள்ளை லாபம் சம்பாதித்தவர்கள் என்ற தகவலும் தெரியவந்துள்ளது.சோதனை விவரங்களை வெளியிட வருமான வரித்துறை மறுத்து விட்டாலும், கணக்கில் காட்டப்படாத கறுப்புப்பணம் 80 கோடி ரூபாய் அளவில் கைப்பற்றப்பட்டதாக இத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications