மீண்டும் காட்டுக்கு செல்கிறார் கோபால்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் ராஜ்குமாரை மீட்க, புதன்கிழமை இரவு 4 வது முறையாக நக்கீரன் கோபால் காட்டுக்குச் செல்வதாக தமிழக முதல்வர்கருணாநிதி தெரிவித்தார்.

தடா கைதிகள் விடுதலை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் அடுத்த மாதம் 11ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ள நிலையில்,அரசுத் தூதர் நக்கீரன் கோபால் சென்னையில் செவ்வாய்கிழமை மாலை தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

சென்னையில் திங்கள்கிழமை கர்நாடக மாநில அமைச்சர் மல்லிகார்ஜூனா கார்கேயும், தமிழக முதல்வர் கருணாநிதியும் நடத்தியஅவசர ஆலோசனைக்கு பின்னர் காட்டுக்கு மீண்டும் தூதரை அனுப்புவது என்று முடிவெடுக்கப்பட்டது.

கர்நாடக சிறையில் உள்ள 121 தடா கைதிகள் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குவிவரங்களுடன், வீரப்பனை அவர் சந்தித்துப் பேசுவார் என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

அதன்படி செவ்வாய்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த அந்த வழக்கு இறுதி தீர்ப்புக்காக அக்டோபர் 11ம் தேதிக்குதள்ளி வைக்கப்பட்டது.

இந்த இழுபறியான சூழ்நிலையில் வீரப்பனை சந்தித்து என்ன தகவல்களை சொல்வது என்பது குறித்து பேசுவதற்காக முதல்வர்கருணாநிதியை, அவரது ஆலிவர் சாலை இல்லத்தில் நக்கீரன் கோபால் செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்தார்.

இருவரும் ஒரு மணி நேரம் இப்பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தினர். அதில் எடுத்த முடிவுப்படி புதன்கிழமை இரவு நக்கீரன்கோபால், காட்டுக்கு கிளம்பிச் செல்கிறார்.

கோபால் மறுப்பு:

முதலில் நக்கீரன் கோபால், முதல்வர் கருணாநிதியிடம் கூறுகையில், நான் மீண்டும் காட்டுக்குச் செல்ல விரும்பவில்லை என்றுதெரிவித்தார். முதல்வர் அவரை சமாதானப்படுத்தியபின் 4 வது முறையாகக் காட்டுக்குச் செல்ல ஒப்புதல் அளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+