ராஜ்குமாரை விடுவிக்கக் கோரி 28ம் தேதி பந்த்
பெங்களூர்:
டாக்டர் ராஜ்குமாரை விரைவில் விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டாக்டர் ராஜ்குமார் அபிமானிகள் சங்கம் வரும் 28 ம் தேதி பந்த்நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத் தலைவர் சாரா கோவிந்த் கூறியதாவது:
வியாழக்கிழமை ராஜ்குமாரை விரைவில் விடுவிக்கக்கோரி சினிமா பிரமுகர்கள் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.
கன்னட நடிகர் ராஜ்குமார், வீரப்பனால் கடத்தப்பட்டு வியாழக்கிழமையுடன் 53 நாட்களாகி விட்டன. இரு மாநில அரசுகளும் எவ்வளவு முயன்றும்இன்னும் அவர் விடுவிக்கப்படவில்லை.
சுப்ரீம்கோர்ட் தடா கைதிகள் விடுதலையை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ராஜ்குமாரின் விடுதலை மேலும், மேலும் தாமதமாகிக் கொண்டேஇருக்கிறது.
இதைக் கண்டித்து 28 ம் தேதி பந்த் நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் 2000 க்கும் மேற்பட்ட ராஜ்குமார் ரசிகர்கள் கலந்து கொள்வார்கள்என்றார்.
சிவராஜ்குமார்:
முன்னதாக, நடிகர் ராஜ்குமாரின் மகனும், நடிகருமான சிவராஜ்குமார் கூறுகையில், நடிகர் ராஜ்குமார் அபிமானிகள் அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்தத்திற்கு நான் எனது முழு ஆதரவையும் அளிக்கிறேன்.
ஆனால், எந்த வித வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபடாமல் பந்த் மிக அமைதியாக நடக்க வேண்டும். எனது அப்பா விரைவில் விடுவிக்கப்படவேண்டும். அதுதான் எனது குறிக்கோள்.
முன்னாள் மத்திய அமைச்சர் முகமது சையித்தின் மகள் கடத்தப்பட்டபோதும், கன்டஹாரில் விமானம் கடத்தப்பட்டபோதும் கடத்தல்காரர்கள்கோரிக்கைப்படி, தீவிரவாதிகளை விடுவித்தது மத்தியஅரசு.
அதேபோல் எனது தந்தையை விடுவிப்பதற்கும், தடா கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட் தடா கைதிகளை விடுவிப்பதில்காலதாமதம் காட்டி வருகிறது என்றார்.
மல்லையா மருத்துவமனையில் பர்வதம்மா:
இதற்கிடையே புதன்கிழமை இரவு உடல்நிலை மோசமடைந்ததையடுத்து மல்லய்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் நடிகர் ராஜ்குமாரின் மனைவிபர்வதம்மா.
ரத்தஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு மல்லய்யா உயர் டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.
அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ரமணராவ் இதுகுறித்துக் கூறுகையில், பர்வதம்மாவின் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் தெரிகிறது. அவர் சிலநாட்கள் ஓய்வெடுத்தால்போதும் என்றார்.
காட்டுக்கு விரைந்தார் கோபால்:
இந்நிலையில், டாக்டர் ராஜ்குமாரை மீட்கும் முயற்சியில் 4 வது முறையாக வீரப்பனைச் சந்திப்பதற்காக சத்தியமங்கலம் காட்டுக்குப் புதன்கிழமை இரவுபுறப்பட்டுச் சென்றுள்ளார் அரசுத்தூதர் நக்கீரன் கோபால்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications