நகைகளை கொள்ளையடித்த இளவரசன், இளவரசி!
கேன்பெரா (ஆஸ்திரேலியா):
ஒரு பக்கம் ஒலிம்பிக் கோலாகலத்தில் சிட்னி நகரமே ஜொலித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கச்சிதமாகதிட்டம் தீட்டி நகைக்கடையில் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது ஒரு ஜோடி.
துபாயைச் சேர்ந்த இளவரசன்-இளவரசி என்று சிட்னி நகைக்கடையில் பொய் கூறி, லட்சக்கணக்கில் நகைகளைக்கொள்ளையடித்த அந்த இளம்ஜோடியை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்துப் புலனாய்வுத்துறை அதிகாரி பால் டன்ஸ்டன் கூறுகையில்,
சிட்னி நகரின் மையப் பகுதியில் உள்ளது சிட்னி ஸ்டோர் நகைக்கடை. செவ்வாய்க்கிழமை மிகவும் விலையுயர்ந்தஆடை அணிகலன்களை அணிந்த இளம் ஜோடி ஒன்று இங்கு வந்தது.
அவர்கள், தாங்கள் துபாயைச் சேர்ந்த இளவரசன், இளவரசி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.அவர்களுக்கு நகைக்கடை உரிமையாளர் பல்வேறு விதமான நகைகளை காட்டினார். அப்போது, அவர்கள் 30, 000பெறுமானமுள்ள டைமன்டை பார்த்து, இது மிகவும் மலிவானது என்று கூறினர்.
இதனால் நகைக்கடை உரிமையாளர் அதை விட விலை அதிகமுள்ள பல டைமன்டுகள் மற்றும் விலையுயர்ந்தநகைகளைக் காட்டினார். அப்போது, திடீரென்று அவர்கள் இருவரும் மாயமாக மறைந்தனர். கடை உரிமையாளர்நோக்கியபோது 5 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்புள்ள 25 டைமண்டுகளைக் காணவில்லை என்றுகண்டுபிடித்தார்.
இதேபோல் இன்னொரு நகைக்கடையிலும் அவர்கள் இதே போல் 4 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்புள்ள30 வகையான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது என்றார் பால் டன்ஸ்டன்.
மேலும் நகைக்கடைகளில் கூடுதல் பாதுகாப்பு போட வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த இரு சம்பவங்கள்குறித்து சிட்னி நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications