ஆந்திர பாணி அரசியலில் அழகிரி
மதுரையின் முசூடா மன்னன் என்றழைக்கப்பட்ட தமிழக முதல்வரின் மகன் மு.க. அழகிரி தற்பொழுது அரசியல் புயலைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்.
மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் தவிர, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி உட்பட பல மாவட்டங்களில் மு.க.அழகிரியின் கொடி தான் பறந்து கொண்டிருந்தது.
கட்சியில் எந்தப்பொறுப்பிலும் இல்லாத பொழுதும், அழகிரியைக்கேட்காமல் தி.மு.க கொடி அங்கே ஏற்றப்பட்டதும் இல்லை,இறக்கப்பட்டதும் இல்லை. அழகிரியின் ஆசியைப் பெறாமல் தி.மு.கவின் எந்த வேட்பாளரும் அங்கே வெற்றிபெற முடியாது. அதுஎம்.எல்.ஏ, எம்.பியாகட்டும், சின்ன வார்டு தேர்தல் வேட்பாளராகட்டும் அண்ணன் ஆசியில்லாமல் ஏதும் செய்யமுடியாது.
தமிழக முதல்வரின் இன்னொரு மகனான மு.க ஸ்டானின் தென் மாவட்டங்களில் நுழைய வேண்டும் என்றால் கூட, அழகிரியின்கண்ணசைப்பு இல்லாமல் நுழையமுடியாது. அப்படியே அழகிரியைக் கேட்காமல் நுழைந்தாலும் ஸ்டாலினுக்கு வரவேற்பு கிடைக்காது.கட்சி பிரகர்கள் சந்திக்க மாட்டார்கள். தொட்டதெல்லாம் சங்கடமாகிக்கொண்டிருக்கும்.
இது இன்று நேற்றல்ல, கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாகவே இப்படி தொடர்வது தென்மாவட்ட தி.மு.கவினருக்கு பழக்கமாகிவிட்டது.ஸ்டாலினுக்கும் கூட தென் மாவட்டங்களுக்குள் நுழைவது என்றால் சற்று டென்ஷனுடனேயே தான் வருவார்.
ஸ்டாலின் தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் வருகிறார் என்றால், முதல் தகவல் அழகிரிக்குத்தான் செல்லும். கட்சிப்படி பொறுப்பில்இருப்பவர்கள் ஸ்டாலினை வரவேற்கவோ, வாழ்த்துக் கூறவோ சென்றால் கூட ஒரு வார்த்தை அண்ணன் கிட்ட செல்லிகிட்டு செய்வோமேஎன்று யோசித்த பிறகு தான் ஸ்டாலினை சந்திக்கவே செய்வார்கள்.
பொன்முத்துராமலிங்கம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர், கருப்பசாமிபாண்டியன் உட்பட பல சக்திவாய்ந்த அரசியல் பிரமுகர்களை பலகட்சிகளில் இருந்தும் தி.மு.கவுக்கு அழைத்துவந்த பெருமை அழகிரியையே சாரும் என்றும் சொல்கிறார்கள் தென்மாவட்ட தி.மு.கவினர்.
இந் நிலையில் ஸ்டாலினும் தனக்கென்று ஒரு கோஷ்டியைத் திரட்டிக் கொண்டிருந்தார். ஸ்டாலினுக்கு என்று ஒரு கோஷ்டியும் அங்கேதிரண்டது என்றாலும் அமைதியாகவே அனைவரும் செயல்பட்டுக்கொண்டிருந்தனர். தி.மு.கவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் கட்சிக்கூட்டங்களிலும் கலந்து கொள்ளாமல் தென் மாவட்டங்களில் தி.மு.கவுக்கு பல அரசர்களை உருவாக்கும் கிங் மேக்கராகவேசெயல்பட்டுக்கொண்டிருந்த அழகிரி.
எத்தனை நாளைக்குத்தான் இப்படி, அமைதியாக செயல்படுவது. நாமும் களமிறங்கலாம் என்று அழகிரியைச் சுற்றியுள்ள மிக நெருக்கமானவட்டாரம் கவலை ப்ளஸ் அக்கறையுடன் விசாரிக்க, அழகிரியும் யோசிக்க ஆரம்பித்தார்.
இதுவும் உண்மைதானே எத்தனை நாளைக்குத்தான் இப்படி இருப்பது. வருகின்ற தேர்தலில் போட்டியிடலாம் என்று முடிவும் செய்தார்அழகிரி. இதற்கு வர் தேர்ந்தெடுத்த தொகுதி திருமங்கலம் தொகுதி.
இதையடுத்து தற்பொழுது திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கும் முத்துராமலிங்கம் சோர்ந்து போனார். நம்மை உருவாக்கியஅழகிரியே இந்தத் தொகுதியில் போட்டியிட்டால் நம் நிலைமை என்னாவது என்று சற்று வருத்தத்தில் இருந்தார்.
இதற்கு முன்பே, அழகிரிக்கு முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ மீது கோபமும் இருந்து வந்தது. ஸ்டாலினுக்கு ஆதரவாக முத்துராமலிங்கம்மாறிவிட்டார் என்று அழகிரிக்கு அவரது ஆதரவாளர்கள் தகவல் கொடுக்க கோபமடைந்தார் அழகிரி.
அழகிரியின் கோபப்பார்வை எம்.எல்.ஏ மீது விழுந்ததுமே தென் மாவட்டங்களில் உள்ள தி.மு.க பிரமுகர்களும் நமக்கு எதற்கு வம்பு என்றுஎம்.எல்.ஏ முத்துராமலிங்கத்திடமிருந்து ஒதுங்கிக்கொண்டனர். ஸ்டாலினின் ஆதரவு இருந்தாலும் கூட மதுரை மாவட்ட திமுகவில்யாருடைய ஆதரவும் அந்த எம்.எல்.ஏவுக்குக் கிடைக்கவில்லை. அரசியலில் தன்னைச் சுற்றி கூட்டம் இல்லாத தலைவர்கள் தாக்கு பிடிக்கமுடியாது. ஆறுமாதம் தனி ஆளாக தவித்த எம்.எல்.ஏ கடைசியில் அ.தி.மு.கவுக்கு தாவிவிட்டார். ( இது பற்றி விரிவாக சில தினங்களுக்குமுன் கட்டுரை வெளியிட்டிருந்தோம்).
அழகிரியை எதிர்ப்பவர்கள்யாரும் திமுகவில் இருக்க முடியாது, அது எம்.எல்.ஏவாகவே இருந்தாலும் சரி என்பதற்கு முத்துராமலிங்கம் ஒருஉதாரணம் என்கிறார்கள் தி.மு.கவினர்.
தனக்கு நெருக்கமான எம்.எல்.ஏ, தனது அண்ணன் அழகிரியின் செயலால் அ.தி.மு.க பக்கம் போய்விட்டார் என்றவுடன் ஸ்டாலின்கோபமடைந்தாராம். இப்படி ஒவ்வொருவராக கிளம்பிக்கொண்டிருந்தால் என்ன செய்வது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தேஆகவேண்டும் என்று நினைத்தார்.
இதன் பிறகு தான் அழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டார். நான் இனி அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்கிற ரீதியில் அறிக்கைவெளியிட, ஸ்டாலின் உட்பட பலர் மகிழ்ச்சியடைந்தனர். அதே நேரத்தில் அழகிரி அறிக்கைவிட்டுவிட்டு ஒரு விஷயத்தை சைலண்டாகஎதிர்பார்த்தார்.
தனது அறிக்கைக்கு பிறகு மதுரை உட்பட தென்மாவட்டங்களில் எழும் உணர்ச்சிபூர்வமான எழுச்சிக்கு பிறகு தனது தந்தையிடமிருந்தேஅழைப்பு வரும். தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு அரசியலில் ஈடுபடலாம் என்பது தான் அழகிரியின் எதிர்பார்ப்பு.
அரசியலில் இருந்து அழகிரி விலகல் என்றவுடன் அப்பொழுதும் மதுரை கொந்தளித்தது. பல இடங்களில் மறியல், உண்ணாவிரதம் என்றுதொடர்ந்தது. ஆனால், அழகிரி அரசியலுக்கு வரலாம் என்று கருணாநிதி அழைக்கவில்லை. இருந்தும் தென்மாவட்ட தி.மு.க அரசியல் களம்அழகிரியைச் சுற்றியே இருந்தது.
அழகிரி அமைதியாகவே இருந்தார். தி.மு.க தலைமையில் இருந்தே அரசியலில் ஈடுபடச்சொல்லி அழைப்பு வரும் என்று எதிர்பார்த்தார்.மாறாக, தலைமையில் இருந்து திமுகவினர் யாரும் கட்சிரீதியாக அழகிரியுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றுஅறிக்கை வர கொதித்துப் போனார் அழகிரி.
தான் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று என்பதால் வெறுத்துப் போனார். நான் இத்தனை நாளும் இங்கிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்அரசியல் நடத்திக் கொண்டிருந்தேன். எனக்கு கிடைத்த பரிசு இதுதானா என்று இப்பொழுது மிக ஆவேசமாக களமிறங்கியிருக்கிறார்.
தென் மாவட்ட தி.மு.க எப்பொழுதும் அண்ணன் அழகிரியின் பின்னால் தான். பத்து வருஷமா இதுக்காகத் தான்திட்டமிட்டுக்கொண்டிருந்தார். மிக அமைதியாக அண்ணணின் அரசியல் பிரவேசம் நடக்கும் என்று எதிர்பார்த்தோம் நடக்கவில்லை. இனிஅதிரடி, ஆந்திர அரசியல் பாணிதான் எங்கள் அண்ணன் பாணியும் என்கிறார்கள் தென்மாவட்ட தி.மு.கவினர்.












Click it and Unblock the Notifications