மாருதி கார் நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தம் தீவிரம்
டெல்லி:
மாருதி உத்யோக் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் கார்உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக சிறிய கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருவது மாருதி உத்யோக் நிறுவனம். இந் நிறுவனத்தில் இந்திய அரசுக்கும்,ஜப்பானின் கார் உற்பத்தி நிறுவனமா சுசூகி மோட்டார் நிறுவனத்துக்கும் தலா 50சதவீத பங்கு உள்ளது.
இந் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கு புதிய பென்ஷன்திட்டத்தையும், புதிய சம்பள விகிதத்தையும் அறிவிக்கவேண்டும் என்று நீண்டநாட்களாகக் கோரி வருகின்றனர். ஆனால், இதுவரை அவர்களது கோரிக்கைகள்நிறைவேற்றப்படவில்லை.
இதையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றுமுடிவு செய்து திங்கள்கிழமை முதல் அவர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
எங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால்போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். ஊழியர்களின்வேலைநிறுத்தத்தால் டெல்லி அருகே உள்ள கர்கோவான் மாருதி கார் உற்பத்திநிறுவனத்தில் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரும்படி நிர்வாகம் கேட்டுக்கொண்டது. ஆனால், எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம்தொடரும். அதுவரை பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளமாட்டோம் என்று மாருதிஉத்யோக் நிறுவன ஊழியர் சங்கத்தின் பொருளாளர் ஜி.கே. வாலியா தெரிவித்தார்.
மாருதி நிறுவன நிர்வாகமோ, செப்டம்பர் 23-ம் தேதிதான் கடைசி நாள். அதற்குள்ஊழியர்கள் தங்களது வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பவேண்டும்.இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications