பெட்ரோல் விலை உயர்வு: மத்திய அமைச்சரவை விரைவில் முடிவு
சேலம்:
காஸ் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சரவை முடிவு செய்யும் என பெட்ரோலிய இணை அமைச்சர் பொன்னுசாமிதெரிவித்துள்ளார்.
சேலத்தில் நிருபர்களுக்கு புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:
பெட்ரோல் பங்குகள் பொதுத் துறை நிறுவனங்களுக்கு அளிக்க அரசு அனுமதியளித்துள்ளது. 10 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட 15 கிலோ மீட்டர்சுற்றளவுப் பகுதி, மற்றும் பஞ்சாயத்து யூனியன் ஆகிய இடங்களில் பெட்ரோல் பங்குகள் அமைக்கப்படும்.
இன்னும் சமையல் எரிவாயு இணைப்புக் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை 14 லட்சம் பேராக உள்ளது.
கார்களில் காஸ் உபயோகிப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான சட்டத் திருத்தம் குடியரசுத் தலைவரின் கையெழுத்திற்குஅனுப்பப்பட்டுள்ளது.
கார்களில் காஸ் உபயோகிக்க புதிய வகை சிலிண்டர் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனையே கார்களில் உபயோகிக்க வேண்டும்.
காஸ் சிலிண்டர் ஒன்றிற்கு அரசு 163 ரூபாய் மானியமாக அளித்து வருகிறது. மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றிற்கு 6 ரூபாயும், டீசலுக்கு மூன்று ரூபாயும்மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய எண்ணெய்த் தொகுப்பிற்கு இதுவரை 9 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அடுத்த மார்ச் மாதத்திற்குள் இந்த பற்றாக்குறை20 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும்.
பெட்ரோலியப் பொருட்களின் விலை தற்போது உயருமா என கூற இயலாது. இது குறித்து அமைச்சரவை விரைவில் முடிவெடுக்கும். புதியபெட்ரோலிய உற்பத்தி இடங்களை கண்டறியும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது.
கடல்பகுதியில் 12 இடங்களிலும், சமவெளிப் பகுதி 6 இடங்களிலும், 6 கடற்கரைப் பகுதிகளிலும் பெட்ரோலியப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.இதனைப் பயன்படுத்த உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் பொன்னுசாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications