சந்திரிகாவுக்கு இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத்துக்கு விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் அதிபர்சந்திரிகா குமாரதுங்காவை ஆதரிப்பது என்று இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இணைத் தலைவர் ராஃப் ஹக்கீம், அதிபர் சந்திரிகாகுமாரதுங்காவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். நீண்ட நேரம் நடந்தபேச்சுவார்த்தையின் முடிவில் சந்திரிகாவை ஆதரிப்பது என்று முடிவுஎடுக்கப்பட்டதாக ஹக்கீம் தெரிவித்தார்.
அக்டோபர் 10-ம் தேதி நடைபெறும் தேர்தலில் சந்திரிகாவையும், அவரது மக்கள்கூட்டணிக் கட்சியையும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கும் என்றார் அவர்.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸுக்கும் மக்கள் கூட்டணிக்கும் இடையே சமீப காலத்தில்எழுந்த கருத்துவேறுபாடுகளைக் களைய விரைவில் நடவடிக்ககை எடுக்கப்படும்என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தலில் ஆதரவு தெரிவிக்கப்படும் என்று ஹக்கீம் அறிவித்ததை அடுத்து அவரைதுறைமுகங்கள் வளர்ச்சி, மறுகட்டமைப்பு மற்றும் மறுவாழ்வுத் துறைக்கான புதியஅமைச்சராக அதிபர் சந்திரிகா நியமித்துள்ளார்.இத் துறையை இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் காங்கிரஸின் தலைவர் அஷ்ரப் கவனித்துவந்தார். சில நாட்களுக்கு முன் நடந்த விமான விபத்தில் அவர் இறந்தார். இதையடுத்துகாலியாக இருந்த அந்த அமைச்சர் பதவியில் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications