அதலெடிக்ஸ்: ஏமாற்றினர் இந்திய வீரர்கள்; அடுத்த சுற்றில் பீனா மோல்
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் வெள்ளிக்கிழமை தொடங்கிய அதலெடிக்ஸ் போட்டிகளில்இந்திய வீரர்கள் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
குண்டு எறிதல், ஈட்டி எறிதல், 400 மீட்டர் ஓட்டம் என மூன்று விளையாட்டுக்களில் 5பேர் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்ட பீனா மோல் தவிரமற்றவர்கள் அனைவரும் தங்களது சொந்த சாதனை அளவுக்குக் கூட திறமையைக்காட்டாமல் வெளியேறினர்.
7-வது தகுதிச் சுற்றில் கலந்து கொண்ட பீனாமோல் 51.51 விநாடிகளில் பந்தையதூரத்தைக் கடந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். பீனா மோலின் தேசிய சாதனை51.21 விநாடிகளாகும்.
பீனா மோல் தவிர மற்றவர்கள் யாரும் சோபிக்கவில்லை. இந்தியாவுக்கு அவர்கள்பெரும் ஏமாற்றத்தையே தந்தனர்.
குண்டு எறிதலில் சக்தி சிங், பகதூர் சிங் இருவரும் கலந்து கொண்டனர். சக்தி சிங்18.40 மீட்டர் தூரம் குண்டு வீசி 32-வது இடத்தையும், பகதூர் சிங் 18.70 மீட்டர் தூரம்குண்டு வீசி 27-வது இடத்தையும் பெற்றனர்.
பகதூர் சிங் மற்றும் சக்தி சிங் இருவரும் தேசிய அளவில் 20 மீட்டர்களுக்கும் அதிகதூரம் குண்டு வீசி சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்ட பரம்ஜித் சிங், பந்தையதூரத்தைக் கடக்க 46.64விநாடிகள் எடுத்துக் கொண்டார். ஆனால் அவரது சொந்தசாதனை 45.56 விநாடிகளாகும்.
தான் கலந்து கொண்ட பிரிவில் பரம்ஜித் சிங் 6-வதாக வந்து அடுத்த சுற்றுக்குமுன்னேறத் தவறிவிட்டார். அது தவிர மொத்தம் கலந்து கொண்ட 64போட்டியாளர்களில் அவர் 49-வது இடம் பிடித்தார்.
ஈட்டி எறிதலில் கலந்து கொண்ட ஜகதீஷ் பிஷ்நோய், 70.86 மீட்டர் தூரத்துக்குத்தான்ஈட்டி எறிந்து 15-வது இடத்தைப் பெற்றார். அவரது சொந்த சாதனை 79.68மீட்டர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிட்னி ஒலிம்பிக்கில்தான் மற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பட்டதை விடபெரிய அளவிலான அதலெடிக்ஸ் அணியை இந்தியா அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
முதல் நாள் போட்டிகளில் கலந்து கொண்ட 5 பேரில் 4 பேர் போட்டிகளில் இருந்துவெளியேறிவிட்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications