ராமர் கோவில்: தேதி முடிவு செய்ய கோவாவில் கூடுகிறது வி.எச்.பி
டெல்லி:
சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமர் கோவில் கட்டுமானப் பணிகளைத் துவக்கும் நாள் குறித்து முடிவு செய்ய கோவாவில் விசுவஇந்து பரிஷத் அமைப்பின் தலைவர்கள் கூடுகின்றனர்.
இதற்கிடையே, இப்பிரச்சினை தொடர்பாக விவாதிக்க பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் அடுத்த வாரம் டெல்லியில் கூடி ஆலோசிக்கின்றனர்.
விஸ்வ ஹிந்துப் பரிஷத் கிரிராஜ் கிஷோர் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட தீர்மானித்துள்ளோம். இங்கு வைக்கப்படவுள்ள சிலையைப் போன்ற 10 அடிஉயரமுள்ள மாதிரி ராமர் சிலை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவிலில் வைக்கப்படவுள்ள சிலை, இந்த மாதிரி சிலையைபோல் 10 மடங்கு அதிக உயரமுடையதாக இருக்கும். கோவில் கட்டுமானப்பணிகளைத் துவங்கும் தேதி குறித்து முடிவு செய்வதற்காக விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் கோவாவில் அக்டோபர் மாதம் 18, 19 ம் தேதிகளில் கூடிஆலோசிப்பார்கள் என்றார்.
பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் பியாரிலால் கன்டெல்வால் கூறுகையில், 1992 ம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்தஇடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என்று நாங்கள் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளோம். அதன்படி, ராமர் கோவில் கட்ட தற்போது முடிவுசெய்துள்ளோம்.
1980 லேயே பாரதிய ஜனதாக் கட்சியும், விஸ்வ ஹிந்து பரிஷத்தும் சேர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து பிரச்சாரம் செய்தது. ராமர்பிறந்த இடமாகிய அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதால் அது பாரதிய ஜனதா கட்சி உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியை எந்த விதத்திலும்பாதிக்காது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமர் கோவில் கட்டப்படுவது குறித்து முஸ்லீம்கள் ஆட்சேபம் தெரிவித்து, அவர்கள் பிரச்சனைகளைஏற்படுத்த முயன்றால் அதை அரசு கவனித்துக் கொள்ளும்.
ராமர் கோவில் அமைப்பதற்கான 40 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. 128 அடி உயரமும், 21 அடி நீளமும், 140 அடி அகலமும் உடைய ராமர் சிலைஅமைக்கப்படும். ராஜஸ்தானில் சலவைக்கல்லால் அமைக்கப்பட்டு வருகிறது ராமர் சிலை.
அயோத்தில் அமைக்கப்படும் இந்தக் கோவிலில் 24 வாசல்கள் அமைக்கப்படும். ராமர் சிலை அமைப்பது, கோவில் கட்டுவது போன்ற அனைத்துத்திட்டங்களும் எங்களிடம் உள்ளன. இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றார் பியாரிலால்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications