போதை மருந்து: பல்கேரிய வீரர் மற்றும் வீராங்கனையிடமிருந்து பதக்கங்கள் பறிப்பு
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் போதை மருந்து பரிசோதனையில் பல்கேரியா நாட்டின் பளுதூக்கும்வீரர், வீராங்கனைகள் சிக்கிக் கொண்டனர்.
இரு வீரர்கள் மற்றும் ஒரு வீராங்கனையிடமிருந்து போட்டிகளில் அவர்கள் வென்றபதக்கங்கள் பறிக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவில் அந் நாட்டின் இஸபெல்லா டிராஜிநேவாதங்கப் பதக்கம் வென்றார். செவ்டாலின் மின்செவ் ஆண்களுக்கான 62 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இவர்களிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் இவர்கள் போதை மருந்துபயன்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரிடமிருந்தும்பதக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களுக்கு அடுத்த இடங்களைப் பெற்றவர்களுக்கு இப் பதக்கங்கள் வழக்கப்படும்.பதக்கங்கள் பறிக்கப்பட்டதுடன் அவர்கள் சிட்னி ஒலிம்பிக்கிலிருந்தும் அவர்கள்நீக்கப்பட்டனர்.
பளுதூக்கும் போட்டியில் அவர்கள் தூக்கிய எடை அளவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. அவை எல்லாம் ரத்து செய்யப்பட்டுவிட்டன என்று சர்வதேச ஒலிம்பிக்கமிட்டியின் மருத்துவ கமிஷன் உறுப்பினர் ஜாக்ஸ் ரோக்கி தெரிவித்தார்.
ஏற்கெனவே ஆண்களுக்கான 56 கிலோ எடைப் பிரிவில் மற்றொரு பல்கேரிய வீரர்இவான் இவானோவ் போதை மருந்துப் பரிசோதனையில் பிடிபட்டார். அவர் வென்றவெள்ளிப் பதக்கம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்கில் பல நாட்டு வீரர்களுடன் போட்டியிட்டு வென்ற பதக்கங்களை போதைமருந்துப் பரிசோதனையில் சிக்கி பல்கேரிய வீரர்களும், வீராங்கனையும் இழந்ததால் அந்நாட்டுக்குத் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனை ஒருவர் போதைமருந்துப் பரிசோதனையில் சிக்கி பதக்கத்தை இழந்தது இதுவே முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது. அத்தகைய சாதனையை பல்கேரிய வீராங்கனை புரிந்துள்ளார்.
பல்கேரிய வீராங்கனை இஸபெல்லாவிடமிருந்து பறிக்கப்பட்ட தங்கப் பதக்கம், அப்பாட்டியில் இரண்டாம் இடம் பிடித்த அமெரிக்க வீராங்கனை தாரா நாட்டுக்குவழங்கப்படுகிறது.
மூன்றாம் இடம் பிடித்த இந்தோனேஷிய வீராங்கனை ரேமா லிசா ரம்பேவாஸுக்குவெள்ளியும், மற்றொரு இந்தோனேஷிய வீராங்கனை ஸ்ரீ இந்திரியானி வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications