நீதிமன்ற வாசலில் வாலிபர் படுகொலை
திருநெல்வேலி:
திருநெல்வேலியில், நீதிமன்ற வாசலில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
நெல்லை தச்சநல்லூர் பகுதியிலுள்ள வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். வயது 25. இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் மேல்இரண்டு கொலை வழக்குகளும், ஒரு கொலை முயற்சி வழக்கும் உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக முத்துக்குமார், பாளையங்கோட்டை நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை வந்தார். அவருடன் மேலும் 4 பேரும் வந்தனர். 5பேரும் நீதிமன்றம் எதிரில் டீ குடித்து விட்டு நீதிமன்றம் நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
அப்போது, முத்துக்குமாருடன் வந்த 4 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்திகளால், முத்துக்குமாரை சரமாரியாக வெட்டினர். அவர் உயிர் தப்பமுயன்றும், ஓட ஓட விரட்டிக் கொலை செய்தனர். இதில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பிணமானார்.
நீதிமன்றத்திற்கு முன்பு நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.முத்துக்குமாரைக் கொன்று விட்டுத் தப்பியவர்களை பிடிக்க போலீஸார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications