நாகர்கோவிலில் மர்ம நோய் தாக்குதல்: தினம் ஒருவர் பலி..?

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

கவலையில் மூழ்கிக்கிடக்கிறார்கள் நாகர்கோவில் மாவட்ட மக்கள். மக்கள் மட்டுமல்ல, மாவட்ட மருத்துவத் துறையிடமிருந்தும்கவலையோடு தமிழக அரசின் உயர் அதிகாரிகளுக்கு குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

அதைப்பார்த்த, அதிகாரிகளும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். என்ன பிரச்சனை? என்ன நடந்தது? எப்படி சரி செய்வது என்றுஆழ்ந்த யோசனையிலும், கவலையிலும் இருக்கிறார்கள்.

விஷயம் இதுதான். கன்னியாகுமரி கடல் பகுதியில் உள்ள மக்களுக்கு தீடீரென்று ஒரு நோய் தொற்றிக் கொண்டிருக்கிறது. என்னநோய் என்றும் கண்டுபிடிக்கமுடியாமல் திணறுகிறது மாவட்ட நிர்வாகம்.

இதுவரை 20 பேர் இந்த நோயால் இறந்து போயிருக்கலாம் எனத் தெரிகிறது.

தீடீரென்று, சிறுநீர் ரத்தச்சிவப்பு நிறத்தில் போகும். அடுத்து தலைவலி, அடுத்து காய்ச்சல் இறுதியில் நெஞ்சுவலி. நெஞ்சுவலிஎன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூன்றாவது நாள் நோய் தாக்கப்பட்டவர் இறந்தும் போகிறார்.

முதலில் நெஞ்சுவலி, மஞ்சள் காமாலை என்று நோயாளிகளுக்கு குறிப்பு எழுதி அனுப்பிக் கொண்டிருந்தனர் அதிகாரிகள்.

தொடர்ச்சியாக பத்துக்கும் மேற்பட்டவர்கள் இறக்க, இது ஏதோ வீபதமான நோய் என்று குறித்து வைத்திருக்கிறார்கள்.

கடந்த டிசம்பர் மாதம், நாகர்கோவில் மாவட்டம் கூடாம்புளியைச் சேர்ந்த ஒருவருக்கு இதே மாதிரி, முதலில் சிறுநீர் சிவப்புக்கலரில் போனது, தலைவலி, காய்ச்சல், நெஞ்சுவலி என்று தொடர்ச்சியாக வந்து மூன்றே நாட்களில் இறந்து போனார். இது தான்முதல் சம்பவம் என்கிறார்கள் நாகர்கோவில் வாசிகள்.

இதனைத் தொடர்ந்து பலர் இறந்து போயிருக்கிறார்கள். இதே மாதிரியான நோய் அறிகுறிகளுடன் கடந்த பதினைந்து தினங்களாகஒரு நாளைக்கு ஒருவர் வீதம் தொடர்ந்து இறந்து கொண்டும் இருக்கிறார்கள். சாவுகள் தொடர்ந்து நடக்கிறது என்றும்கவலையோடு சொல்கிறார்கள் மாவட்ட அதிகாரிகள்.

கடந்த 19-ம் தேதி கர்பிணிப் பெண் ஒருவரும் இறந்துள்ளார். ரஞ்சித் என்கிற இருபத்தைந்து வயது இளைஞர் இந்த நோயால்தீடீரென்று பாதிக்கப்பட்டார். அலறி அடித்துக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தனியார் மருத்துவமனையில்இருந்தவருக்கு தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், நான்கு நாட்களில் இறந்து போனார் ரஞ்சித். இதுநடந்தது கடந்த வாரம்.

ரஞ்சித் இறந்துபோன மறுநிாள், ரஞ்சித்தின் மனைவி இருதயாவுக்கும் ரஞ்சித்துக்கு இருந்த மாதிரியே உடல் நிலை பாதிக்கப்பட,இறுதியில் நிெஞ்சுவலி வந்து இருதயாவும் மருத்துவமனையில் சேர்த்து நான்கு நாட்கள் ஆகின்றது. தனியார் மருத்துவமனையில்தீவிரக் கண்காணிப்பில் இருக்கிறார் இருதயா.

ரஞ்சித்தைத் தொடர்ந்து இருதயாவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின், இது பயங்கரமான தொற்று வியாதியாகஇருக்குமோன்னு பயமா இருக்கு. இன்னும் மாவட்ட நிர்வாகம், மலேரியா, விஷபூச்சிக் கடி, மஞ்சள் காமாலை என்றுசொல்லிக்கொண்டிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இதை உடனே கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். கடலோர கிராமப்புறமக்களுக்கு உடனடியாக போர்க்கால மருத்துவ கண்காணிப்பு அவசியம் என்கிறார்கள் நாகர்கோவில் மக்கள்.

அரசு உடனே விழித்துக்கொண்டு, சாவுகளைத் தடுப்பது நல்லது. செய்யுமா அரசு?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+