ஏற்றுமதி மண்டலத்தின் லாபம் அதிகரிக்கும்
கோவை:
அடுத்த நிதியாண்டின் இறுதிக்குள் சென்னை ஏற்றுமதி மண்டலம் ரூ. 650 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் எனசென்னை ஏற்றுமதி மேம்பாட்டு மண்டல இணைச் செயலர் மாலினி சங்கர் தெரிவித்தார்.
கோவை ஜி.ஆர்.டி.,அறிவியல் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் சென்னை ஏற்றுமதி மேம்பாட்டு மண்டல இணைச்செயலர் மாலினி சங்கர் கலந்து கொண்டார். இங்கு நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
சென்னை ஏற்றுமதி மேம்பாட்டு மண்டலம், ஏற்றுமதியில் முன்னணி வகித்து வருகிறது. விசாகபட்டிணம், மும்பை,கொச்சி துறைமுகங்கள் தற்போது ஏற்றுமதி மண்டலமாக செயல்பட்டு வருகிறது. சென்னைத் துறைமுகத்தில்இதுவரை ரூ. 270 கோடி ஏற்றுமதி மூலம் வருமானம் கிடைத்துள்ளது. அடுத்த நி தி யாண்டிற்குள் ரூ. 650 கோடிவருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் ஏற்றுமதியின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தரூ. 650 கோடி ரூபாய் இலக்கை எளிதாக அடைய முடியும். இந்த ஏற்றுமதி மண்டலத்தின் வருவாயை அதிகரிக்க,வர்த்தகர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
சென்னை ஏற்றுமதி மேம்பாட்டு மண்டலத்திலிருந்து 15 முதல்20 சதவீதம் வரை சாஃப்ட்வேர், ஹார்ட்வேர்,எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 10 சதவீதம் வாசனை திரவியங்கள் ஏற்றுமதிசெய்யப்படுகின்றன. உணவுப் பொருட்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி சுகாதாரமிக்க மண்டலமாக செயல்படும்.இங்குள்ள வசதிகளைப் பற்றி அறிய எம்பிஇஇசட்.காம் என்ற வெப்சைட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம்.இதன் மூலம் வர்த்தக விசாரணைகள் வருகின்றன.
தடையற்ற இன்டர்நெட் இணைப்பு வசதிக்காக தொலைத் தொடர்புத் துறை இந்த ஏற்றுமதி மண்டலத்தில் 3 ஆயிரம்கோடி ரூபாயில் ஆப்டிக்கல் பைபர் மூலம் தொலைத் தொடர்பு வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது என்றார்மாலினி சங்கர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications