அனாதைப் பிணங்களை லயன்ஸ் கிளப் அடக்கம் செய்யும்
சென்னை:
சென்னை அரசு மருத்துவமனையில் கேட்பாரற்று கிடக்கும் அனாதை பிணங்களுக்கு விமோசனம் பிறந்துள்ளது. முதல் கட்டமாக 6 சடலங்களை வாங்கிஅடக்கம் செய்ய லயன்ஸ் கிளப் முன் வந்துள்ளது.
சென்னை அண்ணாநகரில் "சென்னை மீனம் லயன்ஸ் கிளப் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக உள்ள கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை இதய சிகிச்சைநிபுணர் டாக்டர் சோமசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்குகளில் கேட்பாரற்று பல சடலங்கள் உள்ளன. எந்த வித அடையாளம் தெரியாமல், அனாதைப்பிணங்களாக கிடக்கும் அவற்றை அடக்கம் செய்ய வழியில்லாமல் அரசு மருத்துவமனைகள் திணறி வருகின்றன.
இந்நிலையை கருத்தில் கொண்டு அனாதைப் பிணங்களை எடுத்து அடக்கம் செய்யும் சேவையை செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்த திட்டப்படி முதல்கட்டமாக சனிக்கிழமை 6 சடலங்களை எடுத்து முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்ய உள்ளோம்.
அரசு பொது மருத்துவமனையில் உள்ள 6 சடலங்களை தேர்ந்தெடுத்துள்ளோம். அவற்றை மூலக்கடை மயானத்தில் இறுதி மரியாதைகளுடன் அடக்கம்செய்கிறோம்.
அடுத்த கட்டமாக மற்ற அரசு மருத்துவமனைகளில் உள்ள சடலங்களையும் அடக்கம் செய்வோம். அனாதைப் பிணங்களை அடக்கும் செய்யும் இந்த நல்லமுயற்சிக்கு லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் பெரிதும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார் சோமசுந்தரம்.












Click it and Unblock the Notifications